Wednesday, December 22, 2010

பேஸ்புக் மற்றும் பெங்களூர்

பேஸ்புக் மற்றும் பெங்களூர்  


           
               பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்துள்ள, பகிர்ந்த விவரங்கள் மூலம் உங்கள் வீட்டை கொள்ளை அடிக்க முடியுமா? முடியும்.. நம்புவதற்கு கடினமாக தான் இருக்கும்.. இந்த லிங்கை படித்தால் புரியும்...
இங்கு கிளிக்குக!!!




 படித்ததும் வயிற்றில் புளியை கரைத்தது உண்மை.. .. ஒரு நிமிடத்திற்கு  பேஸ்புக்கில் நுழையவே யோசிக்க வைத்து விட்டது.. பதிவர்கள் பெருமபாலும் எத்தனையோ முகம் தெரியாத வாசகர்களை, நண்பர்களை நம்முடைய   நண்பர்களாக பேஸ்புக்கில் இணைக்கிறோம்... அந்த சமயத்தில் நம்முடைய சுய விவரங்களை கொடுக்கும் முன் யோசித்தால் நலம்...


பெங்களூர்:


 i ) ரோடுகள்:


              பெங்களூர் ல வண்டி ஒட்டுறத விட கொடுமையானது வேற ஒண்ணும் இருக்க முடியாது... ஒரு பக்கம் டிராபிக்.. இன்னொரு பக்கம் அங்க உள்ள ரோடுகள்.. அதுவும் பெங்களூர் ல தெரியாத ஒரு ஏரியா க்கு போகறது கொடுமையோ கொடுமை... இங்க போகும் போது ஒரு வழில நாம போய்டுவோம்... ஆனா  திரும்பி வர்றப்ப அதே வழில நீங்க வர முடியாது... ஏன்னா அது ஒன் வே!!   இங்க முக்கால்வாசி ஒன்-வே யா தான் இருக்கும்... 




              
    இன்னொண்ணு, எங்கயாவது போறப்ப, தவறுதலா ரைட்டுக்கு பதிலா லெப்ட்டு எடுத்திட்டாலோ    , அல்லது லெப்டுக்கு பதிலா ரைட்டு எடுத்திட்டாலோ அவ்வளவு தான்.. " U  turn " அவ்வளவு சீக்ரம் கிடைக்காது.. நீங்க " U  turn " எடுக்கணும்னா குறைஞ்சது ஒரு கிலோமீட்டர் போகணும்.. அதுவும் டிராபிக் சமயம்னா உங்கள் பல மணி நேரம் ஸ்வாஹா!!
 
                                 
 எல்லாம் போன வாரம் அனுபவம்!! 


!!) பாசக்கார அதிமேதாவிகள் :




            " நோ என்ட்ரி " நு எவ்வளவு பெருசா எழுதி வச்சு இருந்தாலும் இந்த டூ வீலர் மச்சான்/மச்சினிகள் கண்டும் காணாததுமா  போய்கிட்டு தான் இருப்பாங்க.. நான் தினமும் ஆபீஸ் போற வழில ஒரு குறுகிய சந்து வரும்.. அது ஒரு கார் மட்டுமே போக கூடிய இடைவெளி.. அதனால அது "ஒன் வே " . ஆனா இவங்க இந்த மாதிரி "ஒன் வே" ல வரதுனால சில சமயம் பயங்கர டிராபிக் ஜாம் ஆயிடும்...அதை பத்தி எவனும் கண்டுக்க மாட்டாங்க.. 


                     
  சமயத்துல டிராபிக் போலீஸ்க்கு  பொறுப்பு வந்து அவங்களை பிடிக்க வழக்கம் போல ஒளிஞ்சு இருப்பாங்க... அப்ப தான் அவங்களை பிடிக்க வசதியா இருக்கும்... ஆனா சில பாசக்கார பயலுக என்ன பண்ணுவாங்க ந இந்த மாதிரி ஒன்-வே ல வர்றவங்கள  பார்த்து போலீஸ் அங்க ஒளிஞ்சு இருக்காங்க நு "சிக்னல்  "  கொடுத்துருவாங்க .அவங்களும் வந்த வழில திரும்பி  போய் எஸ்கேப் ஆயிடுவாங்க.. 


  எனக்கு இதை பாக்றப்போ சில சமயம் பயங்கர கோவம் வரும்.. அவன் "நோ என்ட்ரி" நு தெரிஞ்சு தான வர்றான்.. போய் பைன் கட்டட்டுமே... இவன எதுக்கு காப்பாத்தனும்? ... ஒரு தடவை பைன் கட்டினா திரும்பி "நோ என்ட்ரி" ல வாறதுக்கு யோசிப்பான்ல  ?? அப்டி வர்றவங்க  எல்லாம் மெத்த படிச்சவங்க தான்... 


  நானும் நிறைய தடவை "போலீஸ் இருக்காங்க !!! திரும்பி  போய்டுங்க " நு  சிக்னல் கொடுத்துருக்கேன்.. ஆனால் அப்பலாம் போலீஸ் இருந்துருக்க மாட்டாங்க... (இது ஒன் வே !! ஏன் இப்டி வரீங்க நு கேட்டால் நம்ம கூட சண்டைக்கு வருவாங்க.. அவங்க கூட சண்டை போட நமக்கு நேரமும் இருக்காது. )  உண்மைலேயே  போலீஸ் இருக்றப்ப நான் எதுவும் சொல்றது இல்ல.. போய் பைன் கட்டட்டும் நு விட்ருவேன்,...(நான் நல்லவனா ? கெட்டவனா? ) 

 " அனுபவமே ஒருவனுக்கு வாழ்க்கையை கற்று கொடுக்கிறது "


    சாலை  விதிகளை கடைபிடியுங்கள்  ..  இல்லைன்னா






ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!


தங்கள் வருகைக்கு நன்றி..


அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, December 15, 2010

உண்மைக்கு பிரம்படி !!!

உண்மைக்கு பிரம்படி !!!
            
                  என் பள்ளி இரு பாலர் பள்ளி. பெயரென்னவோ இருபாலர் பள்ளி, ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி வகுப்பறைகள், கட்டிடமும் தனி. இரு பாலரும் பார்பதற்கே வாய்ப்பு இல்லை. அது போக மாலை பள்ளி விட்டதும் , முதல்ல பொம்பளை பிள்ளைகளை அனுப்பிட்டு தான் எங்களை அனுப்புவாங்க.

          என்னடா கொடுமைன்னு தான் பல நாட்கள் கழிந்தது.. +1 இறுதி தேர்வு எழுதி முடிச்சதும் ஒரு நல்ல சேதி எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல எழுதி போட்டு இருந்தாங்க. அதாகப்பட்டது என்னன்னா , வரும் பத்து நாட்களுக்கு +2 க்கான சிறப்பு வகுப்புகள் இருபாலருக்கும் சேர்ந்து நடக்கும் என்ற அறிவுப்பு.

        மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள். சிம்ரன்,ரம்பா எல்லாம் கண்முன் வந்து மயிலாடி கொண்டு இருந்தனர்.. என்றும் இல்லாத திரு நாளாக அன்று வேகமா கிளம்பி பள்ளிக்கூடம் போயாச்சு.. அங்கு காத்து இருந்தது  அதிர்ச்சி..

        அது ஒரு இரண்டு அறைகள் கொண்ட வகுப்பறை. இரண்டு அறைக்கும் இடையே ஒரே ஒரு கதவு வைக்ககூடிய இடைவெளி.. ஒரு பக்கம் பாய்ஸ்.. இன்னொரு பக்கம் girls . அந்த  இடைவெளியில் எங்க ஆசிரியை வந்து ஒரு நாற்காலிய போட்டு உட்காந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாங்க.. ஒரு பிள்ளைய கூட பாக்க முடியல... எங்களுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு... முழு பரீட்சை லீவும் போச்சு... வந்த நோக்கமும் நிறைவேறாம போச்சு...

       சரின்னு நாங்க வழக்கம் போல , படம் பேர் சொல்லி விளையாட ஆரம்பிச்சுட்டோம்.. அதாவது படத்தோட முதல் எழுத்தும் , கடைசி எழுத்தும் சொன்னால், படத்தோட முழு பெயரை கண்டு பிடிக்கணும். ஆட்டம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.. இடையில என்ன தோணுச்சோ தெரியல  .. கூட இருந்த ஒருத்தன் , நாங்க விளையாடிட்டு இருந்த பேப்பர்- அ எடுத்து  ராக்கெட் செஞ்சு விட்டுட்டான்.  அது நேரா டீச்சர் அம்மா காலுகிட்ட  போய் விழுந்து தொலைச்சுருச்சு...

         டீச்சர்-க்கு  வந்ததே ஒரு கோவம்.. எங்களை காச் மூச் நு கத்தி குமிச்சுடாங்க. இந்த ராக்கெட்-அ விட்டவன் யாருன்னு சொன்னா தான் விடுவேன்னு ஒரே அடம்.. நாங்களும் நண்பனை காட்டி குடுக்க விரும்பல.. பொறுத்து பார்த்த டீச்சர் , "உங்களுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுக்றேன்.. நீங்க ஒரு பேப்பர்-ல யாரு பண்ணுனது நு உண்மைய எழுதி இங்க வைக்கணும்" நு சொல்லிட்டு  வெளில போய்ட்டாங்க..

   நாங்களும் ஆளுக்கொரு பேப்பர்-அ கிழிச்சு, அதுல உண்மைய எழுதி வச்சிட்டோம்.. அதை வந்து பார்த்த  டீச்சர்-க்கு பேரதிர்ச்சி...ஒரே ஒரு சீட்டை தவிர எல்லாத்துலயும் இப்பிடி எழுதி இருந்துச்சு...

" அவன் தான் டீச்சர்!!!"



மிச்சம் உள்ள ஒண்ணுல இப்டி எழுதி இருந்துச்சு..


" நான் தான் டீச்சர் ""


  அறிவு பூர்வமா யோசிச்சு பார்த்தா நாங்க எல்லாரும் உண்மைய தான் எழுதி இருந்தோம்... இப்பிடி எல்லாரும் உண்மைய சொன்னதுக்கு தண்டனையா விழுந்துச்சு "பிரம்படி". அதுவும் ஒரு பொண்ணு கையால. (சத்திய சோதனை.. ) நீங்களே சொல்லுங்க உண்மைய சொன்னது தப்பா??? (இதுக்கு ஒரு பைசல் பண்ணியே ஆகணும்)

   அந்த ராக்கெட் விட்ட பய புள்ள, கடைசில  சொன்னான்.. "மச்சான்!! கடைசில ஒரு figure அ கண்ணுல காட்டிடாங்கப்பா  " நு..

  போனஸ் வீடியோ :

  Power of BioTechnology :


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, December 1, 2010

அசிங்கபட்டான் டா ஆட்டோகாரன் !!!

அசிங்கபட்டான்   டா ஆட்டோகாரன் !!!

                         ஒரு  தொலைக்காட்சில , ஒரு நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சிக்கு பங்கு பெற பல பிரபலங்கள்  சம்மதம் தெரிவிப்பதற்கு  கொஞ்சம் தயக்கம் காட்டுவாங்க.. ஏன்னா வர போற நேயர்கள் என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்க முடியாது... ஏதாவது கொஞ்சம் சங்கடப்படுற மாதிரி கேள்வி கேட்டுட்டா கஷ்டம்.. இதுக்காகவே  ஒரு ஆள் எப்பவும் ரெடி ய இருப்பாங்க , தொடர்பை துண்டிப்பதற்கு, அல்லது என்ன கேள்வி கேட்க போறீங்க நு கேட்டுட்டு தான் பேச அனுமதிப்பாங்க. சில சமயம் நீங்க இந்த மாதிரி தான் கேட்கணும் செட்-அப் செஞ்சுருவாங்க...

        இந்த மாதிரிலாம் எதுவும் பண்ணாம, நம்மள யாரு என்ன கேட்டுடபோறாங்க நு ரொம்ப கவன குறைவா , ஒரு நிகழ்ச்சி பண்ணும் போது , இந்த மாதிரி அசிங்கம் ஏற்படுறதுலாம் ரொம்ப சகஜம் ..
   
இந்த வீடியோ பாருங்க புரியும்..


            இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு பேட்டில, நம்ம ராஜேந்தர் சார் "Youtube ல அதிகம் பேர் தேடுற name   'T . ராஜேந்தர் ' தான் " னு சொன்ன நியாபகம்.. ஆனா அந்த வீடியோ கு கீழ மக்கள் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுருப்பாரா  நு தெரியல... அப்படி  படிச்சு இருந்தா இவருக்கு இந்த அசிங்கம் வந்துருக்காதோ !!!!

டிஸ்கி :
      தனிப்பட்ட முறையில் , நானும் அதிகம் Youtube ல தேடுற நேம் "T.Rajendhar" தான். அவரோட குறள் டிவி எப்ப வரும் எப்ப வரும் நு waiting pa..

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Thursday, October 21, 2010

ஓர் உயிர் உருவாகிறது !!! 18+

ஓர் உயிர் உருவாகிறது !!!

                                  10th படிச்சு முடிச்சதும் , அடுத்த +1 ku எந்த குரூப் எடுக்கிறது நு நாம முடிவு எடுக்றதுக்கு முன்னாடி ,நம்ம வீட்ல மகனே நீ இந்த குரூப் தான் எடுக்கணும் முடிவு எடுத்துருவாங்க.. எங்க வீட்லயும் அப்டி தான் !!! அப்பலாம் 10th la 400 மார்க் மேல எடுத்த 1st குரூப் ல ஈசியா சீட் கிடைச்சுரும்.. அதுலயும் 2 பிரிவு இருக்கும்.. ஒண்ணு biology   , இன்னொன்னு கம்ப்யூட்டர் சயின்ஸ்.

                                     எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும் ஆர்வம் இருந்துச்சு... ஆனா வீட்ல என்னமோ பையன் படிச்சு டாக்டர் ஆகட்டும் நு ஆசைப்பட்டு , biology ல சேர்த்து விட்டுட்டாங்க. (இப்ப வொர்க் பண்றது என்னமோ பொட்டி தட்ற வேலை தான் ) . எங்க டீச்சர் நல்லா தான் கிளாஸ் எடுப்பாங்க.. ஆனா நமக்கு தான் ஏறாது. இப்டியே போயிட்டு இருந்தாலும் , ஒரே ஒரு subject -எ மேடம் கிளாஸ் எடுக்றதுக்கு முன்னாடியே படிச்சு வச்சு இருந்தோம்... அந்த subject -எ எப்டி டீச்சர் எடுக்றாங்க நு பாக்கலாம்  நு waiting . அந்த நாளும் வந்துச்சு... ஆனா டீச்சர் இந்த ஒரு சப்ஜெக்ட்-எ நீங்களே படிச்சுகோங்க.. நான் கிளாஸ் எடுக்கலன்னு   சொல்லிட்டாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே ஏமாற்றம்.. அந்த subject "மனித இனப்பெருக்கம்".

                         எங்க ஸ்கூல் டீச்சர் மட்டும் தான் அப்டியா ? இல்ல எல்லா ஸ்கூல் டீச்சர்-um அப்டி தானா நு  தெரியல.. எக்ஸாம்-லயும் அந்த subject ல ஒரு கேள்வி கூட வரல.. இன்னொரு ஏமாற்றம்.. சரி போகுது,, நான் விசயத்துக்கு வந்துறேன்.. ஒரு அனிமேஷன் வீடியோ கிடைச்சுச்சு இதை பத்தி... ரொம்ப நீட்-அ அனிமேஷன் ல எடுத்து இருக்காங்க.. ஓர் உயிர் உருவாகும் அந்த வீடியோ..



போனஸ் வீடியோ:
                       How to escape from the boring class .


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Saturday, October 2, 2010

கலக்கலோ கலக்கல்- ஒரு மாணவனின் கலக்கல் பதில்


  • கலக்கலோ கலக்கல்- ஒரு மாணவனின் கலக்கல் பதில்

   ஒரு மாணவனின் கலக்கல் பதில்

                            எக்ஸாம் வர போகுதுன்னு சொன்னால் தான், நாமலாம் "புக்"கவே  எடுக்ற ஆளு. ஆனாலும் எக்ஸாம் ரிசல்ட் வாரப்ப , நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகிடுவோம்... நான் காலேஜ் படிக்றப்ப , என்னோட காலேஜ் ல monthly ,monthly இன்டெர்னல் எக்ஸாம் வச்சுருவாங்க... (ஆனா எதுக்கு வைக்றாங்க நு தெரியாது.. ஒருத்தனும் ஒழுங்கா எழுத போறது கிடையாது.. ) என் கூட படிச்ச friend ஒருத்தன் இருக்கான். கொஞ்சம் குசும்பு பிடிச்சவன்... எக்ஸாம் பேப்பர் ல கண்ட படி எழுதி வச்சுருவான் ... அதிலயும் தமிழ் எக்ஸாம் நா கேட்கவே வேண்டாம்... அய்யா தாறுமாறா எழுதுவார்...

                             எல்லா எக்ஸாம் - kum அந்த கேள்விக்கு சம்பந்தமா ஒரு சினிமா பாட்டை எழுதி வச்சுருவான்  . தமிழ் மேடம் பயங்கர டென்ஷன் ஆயிடுவாங்க நு சொல்லி தான் தெரியனுமா!!! கீழ உள்ளது இதே மாதிரி ஒரு பய புள்ள எக்ஸாம் எழுதுன பேப்பர்..,
ஆனாலும்  ரொம்ப நகைச்சுவை உணர்வோட தான் எழுதி இருக்கான்,.. என்ன ஒண்ணு!!! அந்த டீச்சர் மட்டும் சிரிச்சு இருப்பாங்களான்னு தெரியாது..

(படங்கள் பெரிதாக பார்க்க கிளிக்கவும்  )











 (இதை எனக்கு பகிர்ந்த நண்பருக்கு நன்றி)

மகிழ்ச்சி மலரட்டும்..

பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

டைட்டில் :

Does this ever happen to you in the morning?





ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Thursday, September 23, 2010

மரணத்தை வென்றவன்.

மரணத்தை வென்றவன்..
          
                                "நூலிழையில் உயிர் தப்பினேன்" நு சில பேரு சொல்லிருக்ரத நாம கேட்டு இருக்கலாம்.. மரணத்தின் கடைசி நொடி வரைக்கும் போய்ட்டு வந்தேன் நு சில பேரு சொல்லி இருக்றத நாம கேட்டு இருப்போம்... அந்த ஒரு நொடி, இன்னும் சில பேருக்கு சில மறக்க முடியாத நிகழ்வை தந்து இருக்கும்.. சில பேருக்கு ஒரு நொடியில  எல்லாம் முடிஞ்சு போயிருக்கும்...

                               நானும் என் மனைவியும் , டூ வீலர் ல போறப்போ, என் மனைவி பின்னாடி இருந்து "பார்த்து போங்க , மெதுவா போங்க" நு சொல்லிகிட்டே தான் வருவா.. நானும் "டோன்ட் வொர்ரி , ஐ யம் எ குட் டிரைவர்" நு சொல்லிட்டு ,எப்பவும் போல ஓட்டிட்டு போவேன்.. ஆனா சில சமயம், "நாம எவ்ளோ தான் கவனமா போனாலும், எதிர்த்து வர்றவன் , ஒழுங்கா வரலன்ன நாம என்ன பண்ண முடியும்? " நு யோசிப்பேன்.. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்... நாம ஒழுங்கா போயிட்டு வந்து  வீடு போய் சேந்துருவோம்ன்ற நம்பிக்கைல தான் நாம வெளியவே போக வேண்டி இருக்கு,,,

                         விபத்துல இருந்து உயிர் தப்பிச்சவங்கள பொதுவா "மறு ஜென்மம்" எடுத்து வந்து இருக்றதா சொல்வாங்க... இன்னும் சில பேரு , "விதி, நல்ல நேரம் , தோஷம் , கடவுள் கிருபை " நு அவங்களுக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு பேருல சொல்லிக்குவாங்க. ஒரு தப்பும் செய்யாம , யாரோ ஒருத்தன் செஞ்ச தப்புனால , எத்தனையோ குடும்பம் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு  வழி இல்லாம கஷ்ட பட்டு இருக்கு... வேலைக்கு போய் இருக்ற நம்ம அப்பா , தனக்காக பொம்மையோடு வருவார் நு காத்துகிட்டு இருக்ற குழந்தை, இன்னைக்கு நைட் "காலேஜ் பீஸ்" கட்டுறதுக்கு பணம் தாரேன்னு சொன்ன "அண்ணன்" , சாயந்தரம் சீக்கிரம் வந்துருவேன் , ரெடியா இரு, கோவில்லுக்கு போகலாம் நு சொன்ன "புருஷன்", பீச் ல  வெயிட் பண்ணிட்டு இரு, நான் வந்துட்டு இருக்கேன்னு போன் பண்ண "காதலன்" .. இப்படி பல பேரு வருகைக்காக , பல ஜீவன்கள் எங்கோ ஒரு இடத்தில காத்துட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!!! அவங்களோட நம்பிக்கை நனவாகிறது நம்ம கைலயும் இருக்கு..

ஒரு நிமிடம்!! இல்லை இல்லை!!! ஒரு நொடி நாம் செய்யும் தவறுக்காக, யாரோ ஒருவர் மட்டும் இல்லாமல், ஒரு குடும்பமே அல்லவா துயரப்பட போகிறது. எனக்கு வந்த ஒரு  வீடியோவின் பாதிப்பு தான் இந்த பதிவு...

அந்த வீடியோ கீழே.. இவர்கள் மரணத்தை வென்றவர்கள்..




கூடுமான வரைக்கும் , வாகனத்தை மெதுவா ஓட்டுறதன் மூலமும் , சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றுவதன் மூலமும்  பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். கொஞ்சம் கவனமாவும் , விழிப்புடனும் ஓட்டுங்க...

காலம் யாருக்காகவும் காத்து இருக்காது  .. ஆனா "காலன்" நமக்காக எப்பவும் காத்துகிட்டு இருப்பான்.. அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு வண்டி ஓட்டுங்க... "safe driving"

இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

 இந்த பதிவுக்கு சம்பந்தமான வீடியோ தான்... எல்லாம் safety  ku தான்.. சீட் பெல்ட் போடுங்கப்பா...

                  
(எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ இது.. )

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, September 22, 2010

குற்றவாளி கூண்டில் நித்யானந்தா !!!


குற்றவாளி கூண்டில் நித்யானந்தா !!!!

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..

குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....
உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...
என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....





கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூடியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?
நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?
எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??
இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.



பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ :

தலைப்பு ::: என்னா பொண்ணு டா (தீராத விளையாட்டு பிள்ளை - விஷால் ஸ்டைலில் )




 

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Tuesday, September 21, 2010

சி(ற)ரிப்பு டாக்டர்

சி(ற)ரிப்பு டாக்டர் :
  
                இது முழுக்க முழுக்க கற்பனையே !!!  அப்டினுலாம் சொல்ல மாட்டேன்.. இப்டி ஒரு டாக்டர் உண்மைலேயே இருக்காரு..

            

                   இவர் தாங்க நம்ம சி(ற)ரிப்பு டாக்டர்... இவர பாக்க ஒருத்தர் போயிருக்காரு.. வேற எதுக்கு கவுன்சிலிங்குக்காக !!! அங்க நடந்த கவுன்சிலிங்க அப்டியே கீழ குடுத்து இருக்கேன்... (இதுக்கு பீஸ்லாம் வேணாம் !!!!)

patient:
               டாக்டர்!!! உடற்பயிற்சி செஞ்சா மனுஷனோட ஆயுசு கூடும்னு கேள்விப்பட்டேன்.. உண்மையா ?

டாக்டர்:
             அது உண்மை இல்லேங்க... உடற்பயிற்சி செஞ்சா என்ன ஆகும் ? மனுசனோட இதய துடிப்பு அதிகமாகும் !! இல்லையா!! நீங்க சொல்றத பார்த்தா , காரை வேகமா ஓட்டினா , காரோட லைப் கூடும்னு சொல்ற மாதிரி இருக்கு.. என்னை பொறுத்த வரைக்கும் உடற்பயிற்சி வேஸ்ட்..

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : அப்பாடா !!இனிமேல் கொஞ்சம் late ah எந்திரிச்ச போதும்!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

patient:
          டாக்டர்!!! தண்ணி அடிச்சா உடம்புக்கு  கெடுதலாமே!! அப்ப நான் தண்ணி அடிக்றத குறைச்சுகனுமா ?

டாக்டர்:
              நோ நோ !! அதெல்லாம் தேவை இல்ல... wine எதுல பண்றாங்க.. ப்ரூட் ல தான்,, அதே மாதிரி தான் "brandy" .. பீர் கூட ஏதோ வகையான தானியத்துல தான் தயாரிக்றாங்க.. அதுனால நோ problem !!


(நம்ம மைன்ட் வாய்ஸ்  : என் வயித்துல பீர வார்த்தீங்க டாக்டர்!!!) 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

            
patient:
            என்னோட body /fat விகிதத்த எப்டி calculate பண்றது..

டாக்டர்:

           அது ரொம்ப சிம்பிள்... உங்ககிட்ட ஒரு body , ஒரு fat உம் இருந்தா விகிதம் 1 : 1 .   அப்டி இல்லாம உங்க கிட்ட ரெண்டு body இருந்துனா 2 : 1 . புரிஞ்சுச்சா??

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : ரொம்ப நல்லாவே புரிஞ்சுச்சு.. ஆமா இதுல எதுவும் டபுள் மீனிங் இல்லையே டாக்டர்!!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

patient:
             ரெகுலரா execercise பண்ணா, எந்த நன்மையையும் இல்லன்னு சொல்றீங்களா?

டாக்டர்:
           எஸ்.. என்னோட philosopy என்னன்னா "No pain ... good "

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : டண்டனுக்க !! ஏ டனுகுனக்க !!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

patient:
              எண்ணைல பொரிச்ச உணவுகள சாப்பிட்டா  கெடுதலா ??
டாக்டர்:
             அதெப்படி!! இப்பலாம் பொதுவா எல்லாரும் vegetable ஆயில்ல தான் சமைக்கிறாங்க   .. vegetable சாப்பிட்டா நல்லது.. ஆனா vegetable ல செஞ்ச ஆயில்ல பொரிச்சத சாப்பிட்டா  என்ன ஆயிடும்..

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : எனக்கு ரெண்டு மசாலா வடை பார்சல்ல்ல்ல்  !!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

patient:
         சாக்லேட் சாப்பிடறத பற்றி ?
டாக்டர்:
          cocoa bean !! இன்னொரு vegetable ...

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : எங்க அம்மா சொல்லி இருக்காங்க.. ஏதாவது நல்லா விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணுமாம்  !!  !!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

patient :
           நம்ம உடம்ப ஒரு shape ல வச்சிகிடனும்ன்றது முக்கியமா ?
டாக்டர்:
         "Round "  உம் ஒரு shape தான்.. எப்டி வசதி!!!

(நம்ம மைன்ட் வாய்ஸ்  : நம்ம shape already அப்பிடி தான் ஆகிட்டு இருக்கு..   !!  !!!)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீதி ::
             இதன் மூலமா  நான் என்ன சொல்ல வரேன்னா , அய்யயோ மறந்து போச்சே... யாராவது கொஞ்சம் பின்னூட்டத்துல வந்து சொல்லிட்டு போங்க  .. உங்களுக்கு புண்ணியமா போகும்..

இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

தலைப்பு :::  ஆபத்தான விளையாட்டு !!!



ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Monday, September 20, 2010

கேள்விக்குறி -- 20 - 09 - 2010

கேள்விக்குறி -- 20 - 09 - 2010

                     பொதுவா பதிவு எழுதுறத விட, அந்த பதிவுக்கு தலைப்பு வைக்ரதுக்குள்ள தாவு தீந்துடுது.. படத்தை குப்பையா எடுத்துட்டு, படத்துக்கு தலைப்பு "சிந்து சமவெளி  " நு வைக்கிற  மாதிரி , பதிவுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு தலைப்பு வைக்கலாம் நு யோசிச்சு யோசிச்சு, "கேள்விகுறி" நு  தலைப்பு வைக்கலாம் நு முடிவுக்கு வந்துட்டேன்.. (கொத்து பொரட்டா   , சான்ட்விச், நொறுக்ஸ் நு எல்லா  தலைப்பும் ஏற்கனவே புல் ஆயிடுச்சு ல)... எனக்கு ஒரு சந்தேகம், சினிமா படத்துக்கு தலைப்பு register பண்ற மாதிரி நம்ம பதிவு தலைப்பையும் எங்கயாவது பதிவு பண்ண முடியுமா நு தான்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

        நம்ம தமிழ் மொழி ல பேசுற மாதிரி , மத்த language ல பேசறது வர மாட்டேன்குது...
ஐ .டி ல வேலை பார்க்கிறவங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா,  அவங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலும், தமிழ் ல பேச மாட்டனுங்க.. ஆனா எனக்கு அந்த கொடுப்பனையும்    இல்ல.  கூட வேலை பாக்றவங்க எல்லாம் மத்த மாநிலத்த சேந்தவங்க.. அதுனால அவங்க கிட்ட english ல தான் பேசி ஆகணும்...

    தமிழ் ல நாம சொல்ல நினைகிறத , அப்டியே இங்கிலீஷ் ல translate பண்ணி  சொன்னாலும் நாம நினைகிற பீலிங் மிஸ் ஆயிடுது.. உதாரணத்திற்கு, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற "நண்பேண்டா" ன்ற ஒரு வரி வசனத்த ,எப்டி english ல அந்த பீலிங்கோட மொழி பெயர்க்க சத்தியமா தெரியல!! "friend " டா நு சொன்னா நம்மள மேலயும் கீழயுமா பாக்ரானுங்க... இதுல என்ன டா காமெடி நு!!!

தமிழ் வாழ்க !! தமிழ் வளர்க!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

          போன சனிக்கிழமை, ஆலுக்காஸ் ல நகை வாங்க , நானும் , என் மனைவியும் போனோம்.. நகைலாம் வாங்கி முடிச்சுட்டு, பில் pay பண்ண என்னோட "credit card " எடுத்து நீட்டுனது தான் வினை ஆகி போச்சு... அந்த கடைக்காரன், ரெண்டு தடவை " Swipe " பண்ணிருப்பான் போல  .. என்னோட அக்கௌன்ட் ல இருந்து ரெண்டு தடவை அமௌன்ட் எடுத்துட்டானுங்க  .. பேங்க்குக்கு போன் பண்ணி கேட்டா , ஆலுக்காஸ் அ கேட்க சொல்றன்... அவன கேட்டா இவன கேட்க சொல்றான்...

    இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணி பாக்கணும்... அமௌண்ட திரும்ப போடுறானுங்களா  நு ... இல்லனா பேங்க்குக்கும் வீட்டுக்கும் நடையா நடக்கணும்... கடவுளே!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பலே புகைப்படம்:


   என்னா டைமிங் பா!!!

   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பலே வீடியோ ::

                   நம்ம ஊரு கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு முன்னோடியான நிகழ்ச்சி இது... அதில எனக்கு பிடிச்ச ஒரு வீடியோ இது..

                        
                
ச்ச!!! சான்ஸ் எ இல்ல ...  அவரோட தன்னம்பிக்கை கு ஒரு salute !!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படித்ததில் பிடித்தது:


உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைக்கொள்ளாதே அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகவும் இருக்கும்..



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

தலைப்பு: வாட் அ மேஜிக்




ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Friday, September 17, 2010

சொர்க்கம் கண்டவன் யாரடா!!!

                                             சொர்க்கம் கண்டவன் யாரடா!!!



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !





சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !








சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ? 




மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை 
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன் 
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?







சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!



யாரோ எழுதி , நான் படித்ததை  , எனக்கு பிடித்ததால் இங்கு பதிவு செய்திருக்கிறேன் !!    
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைய சிறப்பு/சிரிப்பு  வீடியோ:

தலைப்பு : புது வித அலாரம் போல!!


  
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space