Wednesday, December 15, 2010

உண்மைக்கு பிரம்படி !!!

உண்மைக்கு பிரம்படி !!!
            
                  என் பள்ளி இரு பாலர் பள்ளி. பெயரென்னவோ இருபாலர் பள்ளி, ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி வகுப்பறைகள், கட்டிடமும் தனி. இரு பாலரும் பார்பதற்கே வாய்ப்பு இல்லை. அது போக மாலை பள்ளி விட்டதும் , முதல்ல பொம்பளை பிள்ளைகளை அனுப்பிட்டு தான் எங்களை அனுப்புவாங்க.

          என்னடா கொடுமைன்னு தான் பல நாட்கள் கழிந்தது.. +1 இறுதி தேர்வு எழுதி முடிச்சதும் ஒரு நல்ல சேதி எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல எழுதி போட்டு இருந்தாங்க. அதாகப்பட்டது என்னன்னா , வரும் பத்து நாட்களுக்கு +2 க்கான சிறப்பு வகுப்புகள் இருபாலருக்கும் சேர்ந்து நடக்கும் என்ற அறிவுப்பு.

        மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள். சிம்ரன்,ரம்பா எல்லாம் கண்முன் வந்து மயிலாடி கொண்டு இருந்தனர்.. என்றும் இல்லாத திரு நாளாக அன்று வேகமா கிளம்பி பள்ளிக்கூடம் போயாச்சு.. அங்கு காத்து இருந்தது  அதிர்ச்சி..

        அது ஒரு இரண்டு அறைகள் கொண்ட வகுப்பறை. இரண்டு அறைக்கும் இடையே ஒரே ஒரு கதவு வைக்ககூடிய இடைவெளி.. ஒரு பக்கம் பாய்ஸ்.. இன்னொரு பக்கம் girls . அந்த  இடைவெளியில் எங்க ஆசிரியை வந்து ஒரு நாற்காலிய போட்டு உட்காந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாங்க.. ஒரு பிள்ளைய கூட பாக்க முடியல... எங்களுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு... முழு பரீட்சை லீவும் போச்சு... வந்த நோக்கமும் நிறைவேறாம போச்சு...

       சரின்னு நாங்க வழக்கம் போல , படம் பேர் சொல்லி விளையாட ஆரம்பிச்சுட்டோம்.. அதாவது படத்தோட முதல் எழுத்தும் , கடைசி எழுத்தும் சொன்னால், படத்தோட முழு பெயரை கண்டு பிடிக்கணும். ஆட்டம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.. இடையில என்ன தோணுச்சோ தெரியல  .. கூட இருந்த ஒருத்தன் , நாங்க விளையாடிட்டு இருந்த பேப்பர்- அ எடுத்து  ராக்கெட் செஞ்சு விட்டுட்டான்.  அது நேரா டீச்சர் அம்மா காலுகிட்ட  போய் விழுந்து தொலைச்சுருச்சு...

         டீச்சர்-க்கு  வந்ததே ஒரு கோவம்.. எங்களை காச் மூச் நு கத்தி குமிச்சுடாங்க. இந்த ராக்கெட்-அ விட்டவன் யாருன்னு சொன்னா தான் விடுவேன்னு ஒரே அடம்.. நாங்களும் நண்பனை காட்டி குடுக்க விரும்பல.. பொறுத்து பார்த்த டீச்சர் , "உங்களுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுக்றேன்.. நீங்க ஒரு பேப்பர்-ல யாரு பண்ணுனது நு உண்மைய எழுதி இங்க வைக்கணும்" நு சொல்லிட்டு  வெளில போய்ட்டாங்க..

   நாங்களும் ஆளுக்கொரு பேப்பர்-அ கிழிச்சு, அதுல உண்மைய எழுதி வச்சிட்டோம்.. அதை வந்து பார்த்த  டீச்சர்-க்கு பேரதிர்ச்சி...ஒரே ஒரு சீட்டை தவிர எல்லாத்துலயும் இப்பிடி எழுதி இருந்துச்சு...

" அவன் தான் டீச்சர்!!!"மிச்சம் உள்ள ஒண்ணுல இப்டி எழுதி இருந்துச்சு..


" நான் தான் டீச்சர் ""


  அறிவு பூர்வமா யோசிச்சு பார்த்தா நாங்க எல்லாரும் உண்மைய தான் எழுதி இருந்தோம்... இப்பிடி எல்லாரும் உண்மைய சொன்னதுக்கு தண்டனையா விழுந்துச்சு "பிரம்படி". அதுவும் ஒரு பொண்ணு கையால. (சத்திய சோதனை.. ) நீங்களே சொல்லுங்க உண்மைய சொன்னது தப்பா??? (இதுக்கு ஒரு பைசல் பண்ணியே ஆகணும்)

   அந்த ராக்கெட் விட்ட பய புள்ள, கடைசில  சொன்னான்.. "மச்சான்!! கடைசில ஒரு figure அ கண்ணுல காட்டிடாங்கப்பா  " நு..

  போனஸ் வீடியோ :

  Power of BioTechnology :


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

17 comments:

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. நல்ல அனுபவங்க..

அரசன் said...

நல்லா இருக்குங்க

Chitra said...

ha,ha,ha,ha.... voted!

மதுரை பாண்டி said...

@பதிவுலகில் பாபு
@அரசன்
@Chitra
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

நா.மணிவண்ணன் said...

ஆஹா நீயும் நம்ம ஊராயா .நம்ம ஊர்க்காரைங்க எல்லாம் ஒரே மாதிரித்தாயா இருக்கோம்

http://neethiarasan.blogspot.com/2010/12/highlights.html . இத படிச்சு பாருங்க தெரியும்

ஆனந்தி.. said...

ok..ok..cool...:))நம்ம ஊருனாலே கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி தான் போலே :))))

மதுரை பாண்டி said...

@நா.மணிவண்ணன்
@ஆனந்தி

வாங்க மதுரை மக்காஸ்!! கருத்துக்கு நன்றி... இந்த சேட்டைலாம் நம்ம கூடவே பிறந்ததுங்க!!

சிவகுமார் said...

இனிய நண்பர் பாண்டி அவர்களுக்கு வணக்கம்! என் பதிவில் 'ஈசன்' விமர்சனம் குறித்து கருத்திட்டதற்கு என் முதற்கண் நன்றி! நானும் முதன் முறை தங்கள் பதிவகத்தை பார்வையிட்டேன். படத்தில் தாங்கள் ஜல்லிக்கட்டில் பாய்வதை பார்த்தேன். காளையை அடக்கிவிட்டீர்களா? என் பதிவில் 'விருதகிரி விமர்சனம் குறித்து கேட்டீர்கள். அதைக்காண என் இரண்டாம் பதிவகமான http://madrasbhavan.blogspot.com/2010/12/blog-post_19.html எனும் இடத்திற்கு வருகை புரியவும். நன்றி!

மதுரை பாண்டி said...

Nandri sivakumar... Ungal vimarsanam kalakkal..

cheena (சீனா) said...

அன்பின் பாண்டி - அவந்தான் - நான் தான் - சூப்பர் - நல்லாவே இருந்திச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மதுரை பாண்டி said...

@cheena :
தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் ரொம்ப நன்றி.. தொடர்து வருகை தாருங்கள்..

உங்களுள் ஒருவன் said...

எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பொண்ண பார்த்து விடுங்க........ கலக்குங்க.........

மதுரை பாண்டி said...

@உங்களுள் ஒருவன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எல் கே said...

உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_18.html

எல் கே said...

உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_18.html

தக்குடு said...

// "மச்சான்!! கடைசில ஒரு figure அ கண்ணுல காட்டிடாங்கப்பா// ha ha . athuthaan mukkiyam pandi sir!..:)

Madurai pandi said...

@தக்குடு

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@எல் கே

அறிமுக படுத்தியதற்கு நன்றி!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space