பேஸ்புக் மற்றும் பெங்களூர்
பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்துள்ள, பகிர்ந்த விவரங்கள் மூலம் உங்கள் வீட்டை கொள்ளை அடிக்க முடியுமா? முடியும்.. நம்புவதற்கு கடினமாக தான் இருக்கும்.. இந்த லிங்கை படித்தால் புரியும்...
இங்கு கிளிக்குக!!!
படித்ததும் வயிற்றில் புளியை கரைத்தது உண்மை.. .. ஒரு நிமிடத்திற்கு பேஸ்புக்கில் நுழையவே யோசிக்க வைத்து விட்டது.. பதிவர்கள் பெருமபாலும் எத்தனையோ முகம் தெரியாத வாசகர்களை, நண்பர்களை நம்முடைய நண்பர்களாக பேஸ்புக்கில் இணைக்கிறோம்... அந்த சமயத்தில் நம்முடைய சுய விவரங்களை கொடுக்கும் முன் யோசித்தால் நலம்...
பெங்களூர்:
i ) ரோடுகள்:
பெங்களூர் ல வண்டி ஒட்டுறத விட கொடுமையானது வேற ஒண்ணும் இருக்க முடியாது... ஒரு பக்கம் டிராபிக்.. இன்னொரு பக்கம் அங்க உள்ள ரோடுகள்.. அதுவும் பெங்களூர் ல தெரியாத ஒரு ஏரியா க்கு போகறது கொடுமையோ கொடுமை... இங்க போகும் போது ஒரு வழில நாம போய்டுவோம்... ஆனா திரும்பி வர்றப்ப அதே வழில நீங்க வர முடியாது... ஏன்னா அது ஒன் வே!! இங்க முக்கால்வாசி ஒன்-வே யா தான் இருக்கும்...
இன்னொண்ணு, எங்கயாவது போறப்ப, தவறுதலா ரைட்டுக்கு பதிலா லெப்ட்டு எடுத்திட்டாலோ , அல்லது லெப்டுக்கு பதிலா ரைட்டு எடுத்திட்டாலோ அவ்வளவு தான்.. " U turn " அவ்வளவு சீக்ரம் கிடைக்காது.. நீங்க " U turn " எடுக்கணும்னா குறைஞ்சது ஒரு கிலோமீட்டர் போகணும்.. அதுவும் டிராபிக் சமயம்னா உங்கள் பல மணி நேரம் ஸ்வாஹா!!
எல்லாம் போன வாரம் அனுபவம்!!
!!) பாசக்கார அதிமேதாவிகள் :
" நோ என்ட்ரி " நு எவ்வளவு பெருசா எழுதி வச்சு இருந்தாலும் இந்த டூ வீலர் மச்சான்/மச்சினிகள் கண்டும் காணாததுமா போய்கிட்டு தான் இருப்பாங்க.. நான் தினமும் ஆபீஸ் போற வழில ஒரு குறுகிய சந்து வரும்.. அது ஒரு கார் மட்டுமே போக கூடிய இடைவெளி.. அதனால அது "ஒன் வே " . ஆனா இவங்க இந்த மாதிரி "ஒன் வே" ல வரதுனால சில சமயம் பயங்கர டிராபிக் ஜாம் ஆயிடும்...அதை பத்தி எவனும் கண்டுக்க மாட்டாங்க..
சமயத்துல டிராபிக் போலீஸ்க்கு பொறுப்பு வந்து அவங்களை பிடிக்க வழக்கம் போல ஒளிஞ்சு இருப்பாங்க... அப்ப தான் அவங்களை பிடிக்க வசதியா இருக்கும்... ஆனா சில பாசக்கார பயலுக என்ன பண்ணுவாங்க ந இந்த மாதிரி ஒன்-வே ல வர்றவங்கள பார்த்து போலீஸ் அங்க ஒளிஞ்சு இருக்காங்க நு "சிக்னல் " கொடுத்துருவாங்க .அவங்களும் வந்த வழில திரும்பி போய் எஸ்கேப் ஆயிடுவாங்க..
எனக்கு இதை பாக்றப்போ சில சமயம் பயங்கர கோவம் வரும்.. அவன் "நோ என்ட்ரி" நு தெரிஞ்சு தான வர்றான்.. போய் பைன் கட்டட்டுமே... இவன எதுக்கு காப்பாத்தனும்? ... ஒரு தடவை பைன் கட்டினா திரும்பி "நோ என்ட்ரி" ல வாறதுக்கு யோசிப்பான்ல ?? அப்டி வர்றவங்க எல்லாம் மெத்த படிச்சவங்க தான்...
நானும் நிறைய தடவை "போலீஸ் இருக்காங்க !!! திரும்பி போய்டுங்க " நு சிக்னல் கொடுத்துருக்கேன்.. ஆனால் அப்பலாம் போலீஸ் இருந்துருக்க மாட்டாங்க... (இது ஒன் வே !! ஏன் இப்டி வரீங்க நு கேட்டால் நம்ம கூட சண்டைக்கு வருவாங்க.. அவங்க கூட சண்டை போட நமக்கு நேரமும் இருக்காது. ) உண்மைலேயே போலீஸ் இருக்றப்ப நான் எதுவும் சொல்றது இல்ல.. போய் பைன் கட்டட்டும் நு விட்ருவேன்,...(நான் நல்லவனா ? கெட்டவனா? )
" அனுபவமே ஒருவனுக்கு வாழ்க்கையை கற்று கொடுக்கிறது "
சாலை விதிகளை கடைபிடியுங்கள் .. இல்லைன்னா
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Wednesday, December 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
பெங்களுர் நெரிசல் அதிர்ச்சியாய் உள்ளது.
ரொம்ப நல்ல பதிவுங்க..
இங்கு நான் நோஎண்ட்ரியில எல்லாம் போறதில்ல.. ஆனால் இங்கே வண்டி ஓட்டனும்னா.. நிறைய டாட்டிக்ஸ் தெரிஞ்சிருக்கனும்..
தினமும் ட்ராபிக்கை ஃபேஸ் பண்றவன் நான்.. காரணம் இங்கே ரோடு பிளான் சரியில்லங்க.. முதல்ல இங்கே போலீஸ்காரங்க ஒளிஞ்சு இருக்காம.. கரெக்டா தங்கள் கடமைகளை செய்தாலே நிறைய முன்னேற்றம் வரும்..
பகிர்வுக்கு நன்றிங்க..
டிராபிக் இப்பயே இவ்வளவு இம்சையாக இருக்கிறதே இன்னும் போக போக நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது . என்ன செய்வது அனுபவித்து தான் ஆகா வேண்டும் .
அண்ணாத்த அந்த லிங்கில ஏதோ இடியாப்பத்தை பிச்சு போட்டமாதிரி எழுத்தில எழுதியிருக்கு, அது ஒண்ணுமே புரியல, அப்பாலிக்கா நம்ம வூட்டாண்ட ஏன்னா இருக்கு தூக்கீட்டுபோக ? :-)
கடைசியில அந்த சங்கு படம்; செம அதகளம், சூப்பர்.
@தமிழ் உதயம் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
@பதிவுலகில் பாபு
//காரணம் இங்கே ரோடு பிளான் சரியில்லங்க.. முதல்ல இங்கே போலீஸ்காரங்க ஒளிஞ்சு இருக்காம.. கரெக்டா தங்கள் கடமைகளை செய்தாலே நிறைய முன்னேற்றம் வரும்..
உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்!
@நா.மணிவண்ணன் :
வேற என்ன பண்றது மணி!!! சகிச்சுகிட்டு போய் தான் ஆகணும்..
@எப்பூடி
//அப்பாலிக்கா நம்ம வூட்டாண்ட ஏன்னா இருக்கு தூக்கீட்டுபோக ? :-)
அண்ணாத்த!! பிரபல பதிவர் நீங்களே இப்டி சொல்லலாமா ?
சகோ..பெங்களூர் டிராபிக் பத்தி என்கிட்டயும் கேட்டால் ஒரு மூணு நாள் புலம்புற அளவுக்கு கதை வச்சுருக்கேன்...சத்தியமா நம்ம ஊரு சொர்க்கம் சகோ..நம்ம மதுரையில் எங்குட்டு போனாலும் சந்து பொந்தில் சுத்தி வந்துருவோம்...ஆனால் பெரிய இம்சை பெங்களூர் இல்...அதுவும் டிராபிக் போலீஸ் சரியா நம்ம tn போர்டு வண்டிய நல்ல உத்து பார்த்து பிடிச்சு பைன் போடுவானுங்க...அதுவும் அல்சூர் ரோடு,ஜோகு பாலையா..m.g.road,cmh.road(indira nagar)எல்லாம் எப்பவும் பஞ்சாயத்து...நிறைய டைம் வழி தெரியாமல் uturn ம் போக முடியாமல் ஊரை திருப்பி திருப்பி சுத்தி வந்த அனுபவம் இருந்து இருக்கு:)))...இப்போ நம்ம மதுரை வந்த பிறகு அந்த கருமத்தை நினைக்க கூட பிடிக்கலை..:))))
@ஆனந்தி
என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வருமா???
சமீபத்தில் மதுரை வந்த போது, அங்கயும் டிராபிக் அதிகம் ஆன மாதிரி பீலிங்!!
konja naalaikku yaarum thamilnaattilirunthu bengalore varavendaam,ellam sariyaanapinnaal solli anuppuirome.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@THOPPITHOPPI
மிக்க நன்றி தொப்பி தொப்பி :))
@vijayan
ippodhaikku idhu sari agura madhiri theriala...
>>> பாண்டி...புத்தாண்டு வாழ்த்துகள்! ஜல்லிக்கட்டுக்கு தயாரா..
புத்தாண்டு வாழ்த்துகள்!! சிவகுமார்!!! ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்து ஆரம்பம்!!
பதிவு கலக்கல்!!!!
சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க....
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!
அன்பின் பாண்டி - எல்லா ஊர்லயும் டிராஃபிக் ஜாம்தான் - வேற வழி இல்ல - ஆமா ஃபேஸ் புக்ல இவ்ளோ சமாச்சாரம் இருக்கா - இப்போதைக்கு இந்தியாவில பயம் அதிகம் இல்லன்னு நினைக்கிறேன் - தெரில - நட்புடன் சீனா
@cheena :
தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் ரொம்ப நன்றி.. ..இந்தியா ல பாதிப்பு கொஞ்சம் கம்மி தான்,,
என் பாலோயர் ஆனாலும் இனி அவர்களின் சினிமா-விமர்சனம், நடிகர்-நடிகைகளை பற்றி பதிவுகளுக்கு வாக்கும், பின்னூட்டமும்.., ஏன் அந்த பதிவை படிக்கப் கூடப் போவதில்லை என்பதை இந்த 2011 புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்கிறேன்! என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்! உங்கள் விமர்சனம் எழுதும் கற்பனைவளத்தையும், க்ரியேடிவிடி -சிந்தனையையும் புகுத்தி, இந்த துறையில் இவ்வாறு சில மாற்றங்களை அல்லது இந்த பிரச்சினைக்கு இப்படி செய்தால் துறையும், நாடும் முன்னேறும் என ஏன் பதிவெழுதக் கூடாது??? சும்மா உங்க கற்பனை வளத்தை சிந்தனையை தட்டிவிடுங்கள்! சினிமா துறையில் இருந்து அடுத்த அரசியல் வாதியும்,முதல்வராகவும் வந்து கொள்ளையடிக்கப் போவதை தடுத்து நிறுத்துங்கள்!!! http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_499.html
Sorry! Sothat I commented this post. Lets try to write a post @ how to reduce the Traffic Jam? How to connect two different areas by flyover/ short route .., some new Ideas..
Post a Comment