Monday, September 20, 2010

கேள்விக்குறி -- 20 - 09 - 2010

கேள்விக்குறி -- 20 - 09 - 2010

                     பொதுவா பதிவு எழுதுறத விட, அந்த பதிவுக்கு தலைப்பு வைக்ரதுக்குள்ள தாவு தீந்துடுது.. படத்தை குப்பையா எடுத்துட்டு, படத்துக்கு தலைப்பு "சிந்து சமவெளி  " நு வைக்கிற  மாதிரி , பதிவுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு தலைப்பு வைக்கலாம் நு யோசிச்சு யோசிச்சு, "கேள்விகுறி" நு  தலைப்பு வைக்கலாம் நு முடிவுக்கு வந்துட்டேன்.. (கொத்து பொரட்டா   , சான்ட்விச், நொறுக்ஸ் நு எல்லா  தலைப்பும் ஏற்கனவே புல் ஆயிடுச்சு ல)... எனக்கு ஒரு சந்தேகம், சினிமா படத்துக்கு தலைப்பு register பண்ற மாதிரி நம்ம பதிவு தலைப்பையும் எங்கயாவது பதிவு பண்ண முடியுமா நு தான்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

        நம்ம தமிழ் மொழி ல பேசுற மாதிரி , மத்த language ல பேசறது வர மாட்டேன்குது...
ஐ .டி ல வேலை பார்க்கிறவங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா,  அவங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலும், தமிழ் ல பேச மாட்டனுங்க.. ஆனா எனக்கு அந்த கொடுப்பனையும்    இல்ல.  கூட வேலை பாக்றவங்க எல்லாம் மத்த மாநிலத்த சேந்தவங்க.. அதுனால அவங்க கிட்ட english ல தான் பேசி ஆகணும்...

    தமிழ் ல நாம சொல்ல நினைகிறத , அப்டியே இங்கிலீஷ் ல translate பண்ணி  சொன்னாலும் நாம நினைகிற பீலிங் மிஸ் ஆயிடுது.. உதாரணத்திற்கு, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற "நண்பேண்டா" ன்ற ஒரு வரி வசனத்த ,எப்டி english ல அந்த பீலிங்கோட மொழி பெயர்க்க சத்தியமா தெரியல!! "friend " டா நு சொன்னா நம்மள மேலயும் கீழயுமா பாக்ரானுங்க... இதுல என்ன டா காமெடி நு!!!

தமிழ் வாழ்க !! தமிழ் வளர்க!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

          போன சனிக்கிழமை, ஆலுக்காஸ் ல நகை வாங்க , நானும் , என் மனைவியும் போனோம்.. நகைலாம் வாங்கி முடிச்சுட்டு, பில் pay பண்ண என்னோட "credit card " எடுத்து நீட்டுனது தான் வினை ஆகி போச்சு... அந்த கடைக்காரன், ரெண்டு தடவை " Swipe " பண்ணிருப்பான் போல  .. என்னோட அக்கௌன்ட் ல இருந்து ரெண்டு தடவை அமௌன்ட் எடுத்துட்டானுங்க  .. பேங்க்குக்கு போன் பண்ணி கேட்டா , ஆலுக்காஸ் அ கேட்க சொல்றன்... அவன கேட்டா இவன கேட்க சொல்றான்...

    இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணி பாக்கணும்... அமௌண்ட திரும்ப போடுறானுங்களா  நு ... இல்லனா பேங்க்குக்கும் வீட்டுக்கும் நடையா நடக்கணும்... கடவுளே!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பலே புகைப்படம்:


   என்னா டைமிங் பா!!!

   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பலே வீடியோ ::

                   நம்ம ஊரு கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு முன்னோடியான நிகழ்ச்சி இது... அதில எனக்கு பிடிச்ச ஒரு வீடியோ இது..

                        
                
ச்ச!!! சான்ஸ் எ இல்ல ...  அவரோட தன்னம்பிக்கை கு ஒரு salute !!!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படித்ததில் பிடித்தது:


உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைக்கொள்ளாதே அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகவும் இருக்கும்..&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

தலைப்பு: வாட் அ மேஜிக்
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

11 comments:

அப்பாவி தங்கமணி said...

Super கேள்விக்குறி ... தமிழ் வாழ்க !! தமிழ் வளர்க!!

Chitra said...

உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைக்கொள்ளாதே அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகவும் இருக்கும்..

....இப்படி எல்லாம் சொல்றாங்களா? சூப்பர்! கேள்விகுறி ரொம்ப நல்லா இருக்குதுங்க..... வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

அந்தப் படம் நல்லாருக்குதுங்க அண்ணே

மதுரை பாண்டி said...

@ அப்பாவி தங்கமணி:
நன்றி!! தொடர்ந்த தங்கள் வருகைக்கு..

மதுரை பாண்டி said...

@ சித்ரா:
ஊர்ல நிறைய பேரு இப்டி தான் சொல்லி , சமாளிச்சுட்டு இருக்கானுங்க ..

மதுரை பாண்டி said...

@ நேசமித்திரன்:

நன்றி.. தங்கள் முதல் வருகைக்கு... "அண்ணே !! " நு சொல்லி வயசை கூட்டிடாதீங்க ..

தமிழ் உதயம் said...

சந்தடிசாக்குல ஆலுக்காஸ்க்கு விளம்பரம் தந்துட்டீங்க. அதுக்கு தனியா அவங்ககிட்ட கறக்க முடியுமான்னு பாருங்க.

மதுரை பாண்டி said...

@ தமிழ் உதயம் :
ஏங்க நீங்க வேற!!! விளம்பரம் இல்லீங்க!! ஒரு தனி மனிதனின் புலம்பல்!!

கவிக்குயில்கள் said...

//பலே புகைப்படம்://

யாருங்க அந்த கேமரா மேன்

cheena (சீனா) said...

அன்பின் பாண்டி - நண்பேண்டா - சொல்ல இயலாது - அங்கே தான் பெர்மணண்டுன்னா பேசாம கன்னடம் கத்துக்கங்க - சரியா - ரெண்டு த்டவ ஸ்வை பண்ணிட்டான்னு தெரிஞ்சா ஆலுக்காஸ் தான் பொறுப்பு - ஆனா பேங்கில நீங்க கையெழுத்து போட்ட ஸ்லிப் காபி கேளுங்க- ரெண்டு தடவ ஆலுக்காஸ் அக்கவுண்ட்லே கிரெடிட் ஆச்சுன்னு சர்டிஃபிகேட் கேளுங்க - ரெண்டயும் எடுத்துக்கிட்டு போயி ஆலுக்காஸ ஒரு வழி பண்ணுங்க - அப்புறம் ..... நட்புடன் சீனா

மதுரை பாண்டி said...

@cheena :
தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் ரொம்ப நன்றி..
அந்த பிரச்சனை solve பண்ணியாச்சு சீனா!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space