Wednesday, December 22, 2010

பேஸ்புக் மற்றும் பெங்களூர்

பேஸ்புக் மற்றும் பெங்களூர்  


           
               பேஸ்புக்கில் நீங்கள் கொடுத்துள்ள, பகிர்ந்த விவரங்கள் மூலம் உங்கள் வீட்டை கொள்ளை அடிக்க முடியுமா? முடியும்.. நம்புவதற்கு கடினமாக தான் இருக்கும்.. இந்த லிங்கை படித்தால் புரியும்...
இங்கு கிளிக்குக!!!
 படித்ததும் வயிற்றில் புளியை கரைத்தது உண்மை.. .. ஒரு நிமிடத்திற்கு  பேஸ்புக்கில் நுழையவே யோசிக்க வைத்து விட்டது.. பதிவர்கள் பெருமபாலும் எத்தனையோ முகம் தெரியாத வாசகர்களை, நண்பர்களை நம்முடைய   நண்பர்களாக பேஸ்புக்கில் இணைக்கிறோம்... அந்த சமயத்தில் நம்முடைய சுய விவரங்களை கொடுக்கும் முன் யோசித்தால் நலம்...


பெங்களூர்:


 i ) ரோடுகள்:


              பெங்களூர் ல வண்டி ஒட்டுறத விட கொடுமையானது வேற ஒண்ணும் இருக்க முடியாது... ஒரு பக்கம் டிராபிக்.. இன்னொரு பக்கம் அங்க உள்ள ரோடுகள்.. அதுவும் பெங்களூர் ல தெரியாத ஒரு ஏரியா க்கு போகறது கொடுமையோ கொடுமை... இங்க போகும் போது ஒரு வழில நாம போய்டுவோம்... ஆனா  திரும்பி வர்றப்ப அதே வழில நீங்க வர முடியாது... ஏன்னா அது ஒன் வே!!   இங்க முக்கால்வாசி ஒன்-வே யா தான் இருக்கும்... 
              
    இன்னொண்ணு, எங்கயாவது போறப்ப, தவறுதலா ரைட்டுக்கு பதிலா லெப்ட்டு எடுத்திட்டாலோ    , அல்லது லெப்டுக்கு பதிலா ரைட்டு எடுத்திட்டாலோ அவ்வளவு தான்.. " U  turn " அவ்வளவு சீக்ரம் கிடைக்காது.. நீங்க " U  turn " எடுக்கணும்னா குறைஞ்சது ஒரு கிலோமீட்டர் போகணும்.. அதுவும் டிராபிக் சமயம்னா உங்கள் பல மணி நேரம் ஸ்வாஹா!!
 
                                 
 எல்லாம் போன வாரம் அனுபவம்!! 


!!) பாசக்கார அதிமேதாவிகள் :
            " நோ என்ட்ரி " நு எவ்வளவு பெருசா எழுதி வச்சு இருந்தாலும் இந்த டூ வீலர் மச்சான்/மச்சினிகள் கண்டும் காணாததுமா  போய்கிட்டு தான் இருப்பாங்க.. நான் தினமும் ஆபீஸ் போற வழில ஒரு குறுகிய சந்து வரும்.. அது ஒரு கார் மட்டுமே போக கூடிய இடைவெளி.. அதனால அது "ஒன் வே " . ஆனா இவங்க இந்த மாதிரி "ஒன் வே" ல வரதுனால சில சமயம் பயங்கர டிராபிக் ஜாம் ஆயிடும்...அதை பத்தி எவனும் கண்டுக்க மாட்டாங்க.. 


                     
  சமயத்துல டிராபிக் போலீஸ்க்கு  பொறுப்பு வந்து அவங்களை பிடிக்க வழக்கம் போல ஒளிஞ்சு இருப்பாங்க... அப்ப தான் அவங்களை பிடிக்க வசதியா இருக்கும்... ஆனா சில பாசக்கார பயலுக என்ன பண்ணுவாங்க ந இந்த மாதிரி ஒன்-வே ல வர்றவங்கள  பார்த்து போலீஸ் அங்க ஒளிஞ்சு இருக்காங்க நு "சிக்னல்  "  கொடுத்துருவாங்க .அவங்களும் வந்த வழில திரும்பி  போய் எஸ்கேப் ஆயிடுவாங்க.. 


  எனக்கு இதை பாக்றப்போ சில சமயம் பயங்கர கோவம் வரும்.. அவன் "நோ என்ட்ரி" நு தெரிஞ்சு தான வர்றான்.. போய் பைன் கட்டட்டுமே... இவன எதுக்கு காப்பாத்தனும்? ... ஒரு தடவை பைன் கட்டினா திரும்பி "நோ என்ட்ரி" ல வாறதுக்கு யோசிப்பான்ல  ?? அப்டி வர்றவங்க  எல்லாம் மெத்த படிச்சவங்க தான்... 


  நானும் நிறைய தடவை "போலீஸ் இருக்காங்க !!! திரும்பி  போய்டுங்க " நு  சிக்னல் கொடுத்துருக்கேன்.. ஆனால் அப்பலாம் போலீஸ் இருந்துருக்க மாட்டாங்க... (இது ஒன் வே !! ஏன் இப்டி வரீங்க நு கேட்டால் நம்ம கூட சண்டைக்கு வருவாங்க.. அவங்க கூட சண்டை போட நமக்கு நேரமும் இருக்காது. )  உண்மைலேயே  போலீஸ் இருக்றப்ப நான் எதுவும் சொல்றது இல்ல.. போய் பைன் கட்டட்டும் நு விட்ருவேன்,...(நான் நல்லவனா ? கெட்டவனா? ) 

 " அனுபவமே ஒருவனுக்கு வாழ்க்கையை கற்று கொடுக்கிறது "


    சாலை  விதிகளை கடைபிடியுங்கள்  ..  இல்லைன்னா


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!


தங்கள் வருகைக்கு நன்றி..


அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, December 15, 2010

உண்மைக்கு பிரம்படி !!!

உண்மைக்கு பிரம்படி !!!
            
                  என் பள்ளி இரு பாலர் பள்ளி. பெயரென்னவோ இருபாலர் பள்ளி, ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி வகுப்பறைகள், கட்டிடமும் தனி. இரு பாலரும் பார்பதற்கே வாய்ப்பு இல்லை. அது போக மாலை பள்ளி விட்டதும் , முதல்ல பொம்பளை பிள்ளைகளை அனுப்பிட்டு தான் எங்களை அனுப்புவாங்க.

          என்னடா கொடுமைன்னு தான் பல நாட்கள் கழிந்தது.. +1 இறுதி தேர்வு எழுதி முடிச்சதும் ஒரு நல்ல சேதி எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல எழுதி போட்டு இருந்தாங்க. அதாகப்பட்டது என்னன்னா , வரும் பத்து நாட்களுக்கு +2 க்கான சிறப்பு வகுப்புகள் இருபாலருக்கும் சேர்ந்து நடக்கும் என்ற அறிவுப்பு.

        மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள். சிம்ரன்,ரம்பா எல்லாம் கண்முன் வந்து மயிலாடி கொண்டு இருந்தனர்.. என்றும் இல்லாத திரு நாளாக அன்று வேகமா கிளம்பி பள்ளிக்கூடம் போயாச்சு.. அங்கு காத்து இருந்தது  அதிர்ச்சி..

        அது ஒரு இரண்டு அறைகள் கொண்ட வகுப்பறை. இரண்டு அறைக்கும் இடையே ஒரே ஒரு கதவு வைக்ககூடிய இடைவெளி.. ஒரு பக்கம் பாய்ஸ்.. இன்னொரு பக்கம் girls . அந்த  இடைவெளியில் எங்க ஆசிரியை வந்து ஒரு நாற்காலிய போட்டு உட்காந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாங்க.. ஒரு பிள்ளைய கூட பாக்க முடியல... எங்களுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு... முழு பரீட்சை லீவும் போச்சு... வந்த நோக்கமும் நிறைவேறாம போச்சு...

       சரின்னு நாங்க வழக்கம் போல , படம் பேர் சொல்லி விளையாட ஆரம்பிச்சுட்டோம்.. அதாவது படத்தோட முதல் எழுத்தும் , கடைசி எழுத்தும் சொன்னால், படத்தோட முழு பெயரை கண்டு பிடிக்கணும். ஆட்டம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.. இடையில என்ன தோணுச்சோ தெரியல  .. கூட இருந்த ஒருத்தன் , நாங்க விளையாடிட்டு இருந்த பேப்பர்- அ எடுத்து  ராக்கெட் செஞ்சு விட்டுட்டான்.  அது நேரா டீச்சர் அம்மா காலுகிட்ட  போய் விழுந்து தொலைச்சுருச்சு...

         டீச்சர்-க்கு  வந்ததே ஒரு கோவம்.. எங்களை காச் மூச் நு கத்தி குமிச்சுடாங்க. இந்த ராக்கெட்-அ விட்டவன் யாருன்னு சொன்னா தான் விடுவேன்னு ஒரே அடம்.. நாங்களும் நண்பனை காட்டி குடுக்க விரும்பல.. பொறுத்து பார்த்த டீச்சர் , "உங்களுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுக்றேன்.. நீங்க ஒரு பேப்பர்-ல யாரு பண்ணுனது நு உண்மைய எழுதி இங்க வைக்கணும்" நு சொல்லிட்டு  வெளில போய்ட்டாங்க..

   நாங்களும் ஆளுக்கொரு பேப்பர்-அ கிழிச்சு, அதுல உண்மைய எழுதி வச்சிட்டோம்.. அதை வந்து பார்த்த  டீச்சர்-க்கு பேரதிர்ச்சி...ஒரே ஒரு சீட்டை தவிர எல்லாத்துலயும் இப்பிடி எழுதி இருந்துச்சு...

" அவன் தான் டீச்சர்!!!"மிச்சம் உள்ள ஒண்ணுல இப்டி எழுதி இருந்துச்சு..


" நான் தான் டீச்சர் ""


  அறிவு பூர்வமா யோசிச்சு பார்த்தா நாங்க எல்லாரும் உண்மைய தான் எழுதி இருந்தோம்... இப்பிடி எல்லாரும் உண்மைய சொன்னதுக்கு தண்டனையா விழுந்துச்சு "பிரம்படி". அதுவும் ஒரு பொண்ணு கையால. (சத்திய சோதனை.. ) நீங்களே சொல்லுங்க உண்மைய சொன்னது தப்பா??? (இதுக்கு ஒரு பைசல் பண்ணியே ஆகணும்)

   அந்த ராக்கெட் விட்ட பய புள்ள, கடைசில  சொன்னான்.. "மச்சான்!! கடைசில ஒரு figure அ கண்ணுல காட்டிடாங்கப்பா  " நு..

  போனஸ் வீடியோ :

  Power of BioTechnology :


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, December 1, 2010

அசிங்கபட்டான் டா ஆட்டோகாரன் !!!

அசிங்கபட்டான்   டா ஆட்டோகாரன் !!!

                         ஒரு  தொலைக்காட்சில , ஒரு நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சிக்கு பங்கு பெற பல பிரபலங்கள்  சம்மதம் தெரிவிப்பதற்கு  கொஞ்சம் தயக்கம் காட்டுவாங்க.. ஏன்னா வர போற நேயர்கள் என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்க முடியாது... ஏதாவது கொஞ்சம் சங்கடப்படுற மாதிரி கேள்வி கேட்டுட்டா கஷ்டம்.. இதுக்காகவே  ஒரு ஆள் எப்பவும் ரெடி ய இருப்பாங்க , தொடர்பை துண்டிப்பதற்கு, அல்லது என்ன கேள்வி கேட்க போறீங்க நு கேட்டுட்டு தான் பேச அனுமதிப்பாங்க. சில சமயம் நீங்க இந்த மாதிரி தான் கேட்கணும் செட்-அப் செஞ்சுருவாங்க...

        இந்த மாதிரிலாம் எதுவும் பண்ணாம, நம்மள யாரு என்ன கேட்டுடபோறாங்க நு ரொம்ப கவன குறைவா , ஒரு நிகழ்ச்சி பண்ணும் போது , இந்த மாதிரி அசிங்கம் ஏற்படுறதுலாம் ரொம்ப சகஜம் ..
   
இந்த வீடியோ பாருங்க புரியும்..


            இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு பேட்டில, நம்ம ராஜேந்தர் சார் "Youtube ல அதிகம் பேர் தேடுற name   'T . ராஜேந்தர் ' தான் " னு சொன்ன நியாபகம்.. ஆனா அந்த வீடியோ கு கீழ மக்கள் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுருப்பாரா  நு தெரியல... அப்படி  படிச்சு இருந்தா இவருக்கு இந்த அசிங்கம் வந்துருக்காதோ !!!!

டிஸ்கி :
      தனிப்பட்ட முறையில் , நானும் அதிகம் Youtube ல தேடுற நேம் "T.Rajendhar" தான். அவரோட குறள் டிவி எப்ப வரும் எப்ப வரும் நு waiting pa..

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space