சொர்க்கம் கண்டவன் யாரடா!!!
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
யாரோ எழுதி , நான் படித்ததை , எனக்கு பிடித்ததால் இங்கு பதிவு செய்திருக்கிறேன் !!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றைய சிறப்பு/சிரிப்பு வீடியோ:
தலைப்பு : புது வித அலாரம் போல!!
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Friday, September 17, 2010
Subscribe to:
Posts (Atom)




