Thursday, January 6, 2011

மன்மதன் அம்பு கமல் , நித்யானந்தா மற்றும் பலர்!!

கமல் , நித்யானந்தா மற்றும் பலர்!!

கமல் --> மன்மதன் அன்பு   :

       கமலின் அதி தீவிர ரசிகனா தான் நானும் இருந்தேன். என் சித்தப்பா இன்றும் கமல் நற்பணி மன்ற உறுப்பினர்.. சின்ன வயசுல இருந்தே கமல் தான் சிறந்தவர் , அவர் முன்னாடி ரஜினிலாம் ஒண்ணும் இல்லன்னு என் சித்தப்பா சொல்லியே , விரும்பியும் விரும்பாமலும் , கமலை ரசிக்க ஆரம்பித்தேன்.


            
          என் சித்தப்பா, மன்ற உறுப்பினர் என்பதால், எல்லா கமல் படத்துக்கும் மன்ற token கிடைச்சுரும்... எல்லா படத்தையும் பார்த்து விட்டு வருவோம்... (ஹே ராம் படத்தை இந்த மாதிரி பார்த்துட்டு வந்ததுக்கு வீட்ல திட்டு விழுந்துச்சு  !!!   ஏன்னா  அது A படமாம் )
நான் அதிக முறை பார்த்த கமல் படம்னா அது மைகேல் மதன காம ராஜன் மற்றும் தெனாலி.

              அதெல்லாம் ஒரு காலம்.. எப்போ இந்த பதிவுலகை கவனிக்க ஆரம்பித்தேனோ கமல் பற்றிய  என் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. நான் இவ்வளவு நாள் பார்த்து ரசித்து வந்த கமல் , பல உலக திரைபடங்களை பார்த்து (சுட்டு) தான் பல படங்களை எடுத்து தன் சொந்த சரக்காக விடுகிறார் என்று பரவலாக கமல் மீது குற்றசாட்டு. உலக படங்களை காபி அடித்து அந்த படங்களில் , தானே நாயகனாய் நடிப்பதால் தானோ , உலக நாயகன் நு பெயர் போல!!  (பெயர்  காரணம் !!!)

              மன்மதன் அம்பு படமும் காபி  தான்னு சொல்றாங்க... இருக்கட்டும்..
பொதுவா பெரிய நடிகைகல்லாம் ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தனை தான் தேடி பிடிச்சு கல்யாணம் பண்றாங்க.. அதன் காரணங்களை தான் மன்மதன் அம்பு அலசுகிறது.. (ச்சே!!! எப்பிடி இப்பிடி... நாங்களும் யோசிப்போம்ல !! )

நித்யானந்தா :

             அந்த சர்ச்சைக்குரிய வீடியோ டேப்பில் இருந்தது ரஞ்சிதா தான்னு நித்தியானந்தாவே  சொல்லிட்டாரு  ... ஆனா அது நான் இல்லன்னு ரஞ்சிதா சொல்றாங்க... என்ன கருமமோ...


இன்னைக்கு தினத்தந்தில வந்த இந்த  போட்டோ பாருங்க.. உண்மைலேயே பாத பூஜை தான் பண்றாங்க!!! அந்த கடவுள் என்ன அருமையா பக்தர்களுக்கு காட்சி தர்ரருனு பாருங்க... நேர்ல இதை பார்த்தவங்க நேரா சொர்க்கத்துக்கு தான் போவாங்க!!!

A .R .ரஹ்மான் :
              

                  இன்று பிறந்த நாள் காணும் ஆஸ்கார் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

காலைல ஹலோ FM கேட்டபோ தான் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுச்சு, அது என்னென்னா சத்யராஜ் படத்துக்கு நம்ம A .R .ரஹ்மான் இசை அமைச்சு இருக்கார் நு... சத்தியமா இத்தனை நாள் எனக்கு தெரியாது.. ஆனா அந்த படத்துல் எனக்கு ஒரு பாட்டு ரொம்ப பிடிச்சது...

   செந்தமிழ் நாட்டு தமிழச்சியே !! சேலை உடுத்த தயங்குறியே!!!
(படம் : வண்டி சோலை சின்ராசு!! )

ரஜினி--> எந்திரன் :

            வரும் பொங்கல் அன்னைக்கு ஜெமினி டிவியில் " Robo " படம் போடுறாங்க.. சன் டிவி ல அடுத்த தீவாளிக்கு தான் போடுவாங்க போல... ம்ம்ம்...
காதல் அணுக்கள் சாங்-la ரஜினி இப்டி பாடுவாரு...


சனா சனா ஒரே வினா!!!
அழகின் மொத்தம் நீயா?
நீ நீ நியூட்டன் நியூட்டனின் விதியா  ?
உந்தன்
நேசம்  நேசம்  எதிர்வினையா ?
நீ
ஆயிரம்  விண்மீன்  திரட்டிய  புன்னகையா ?
அழகின்  மொத்தம்  நீயா ?ஒரே வினா கேக்குறேன்னு சொல்லிட்டு , வரிசையா கேள்வி கேட்டுட்டே இருக்காரு..  ஒரு வேளை "ஒரேரேரேரே" வினான்னு சொல்லி இருப்பாரோ ?!!
   
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

39 comments:

THOPPITHOPPI said...

//உலக படங்களை காபி அடித்து அந்த படங்களில் , தானே நாயகனாய் நடிப்பதால் தானோ , உலக நாயகன் நு பெயர் போல!! (பெயர் காரணம் !!!)//

HAHAHA........

தமிழ் உதயம் said...

உலக நாயகன் பெயர் குறித்து சொன்ன காரணம் அருமை.

ஆனந்தி.. said...

சூப்பர் ஆ இருந்தது கலவை...:)) கமல் பற்றிய பார்வையில் நீங்க ரொம்ப அறிவாளி ஆய்ட்டு வரிங்கன்னு தெரியுது..:))

ரஞ்சிதா,நித்யா காதல் ஜோடி பாவம்...விட்ரலாம்...:))) அவங்க ஆளுக்கு அவங்க என்னவோ பண்றாங்க...டோன்ட் be பொறாமை சகோ.. .:))

ஐஸ் அழகில் எத்தனை வினா வேணும்னாலும் கேட்க தூண்டிருக்கும்...:))))

ஆனந்தி.. said...

சகோ உங்களுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் வோட்டு எல்லாம் போட்டு இருக்காங்க...வாழ்த்துக்கள்....நீங்க பிரபல பதிவர் ஆய்ட்டு வரிங்க..:)))

நா.மணிவண்ணன் said...

நண்பா நல்ல கலக்கல் பதிவு . கமலின் பெயர்காரணம் , சத்தியராஜ் படத்திற்கு A.R.ரகுமான் இசை என்ற அறிய தகவல்கள் . அப்பறம் அந்த ஆளு காலா தொட்டு கும்பிட்டா கண்டிப்பாக சொர்கத்திற்கு தான் போவோம் ( இன்னும் எத்தனை காலம் ஏமாறுவார் இந்த நாட்டிலே )

மர்மயோகி said...

லூசாடா நீ....என்ன சொல்றேண்ணே தெரியல....சரியா உளறி கொட்டி இருக்கே..எவனை திட்டினாலும் லூசு ரஜினிய பத்தி சொல்லும்போது மட்டும் பம்மிடுரீங்களே என்னடா காரணம்?

பதிவுலகில் பாபு said...

எல்லாரையும் ரொம்ப நல்லா விமர்சிச்சிருக்கீங்க.. ரசிச்சுப் படிச்சேன்..

மன்மதன் அம்பு.. ஹிட்ச் அப்படிங்கற ஆங்கிலப் படம்.. வில்ஸ் ஸ்மித் நடிச்சிருந்தார்.. உலகப்படங்களை சுட்டு எடுத்திருந்தாலும் கமல் திறமையான நடிகர்தான்.. :-)

மதுரை பாண்டி said...

@THOPPITHOPPI
@ தமிழ் உதயம்


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!

மதுரை பாண்டி said...

@ஆனந்தி

//ரஞ்சிதா,நித்யா காதல் ஜோடி பாவம்...விட்ரலாம்...:))) அவங்க ஆளுக்கு அவங்க என்னவோ பண்றாங்க...டோன்ட் be பொறாமை சகோ.. .:))

ஐயோ !! எனக்கென்ன பொறாமை வேண்டி கிடக்கு!!! வாழும் கடவுள் இப்பிடி ஆயிட்டாரேன்னு நு தான் வருத்தம்!!!

மதுரை பாண்டி said...

@ஆனந்தி

//சகோ உங்களுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் வோட்டு எல்லாம் போட்டு இருக்காங்க...வாழ்த்துக்கள்....நீங்க
பிரபல பதிவர் ஆய்ட்டு வரிங்க..:))

அப்பாடா நானும் பிரபல பதிவர் ஆயிட்டேன்!!!

மதுரை பாண்டி said...

@மர்மயோகி

மர்மயோகி படம் ட்ராப் ஆயிடுச்சு நு கேள்வி பட்டேன் .. எனக்கும் வருத்தம் தான்... அதுல என் கனவு கன்னி "திரிஷா" நடிக்க வேண்டியது... ம்ம்ம்ம்...

அப்புறம் ரஜினி பத்தி சொல்ல நான் ஒண்ணும் பம்ம வேண்டியது இல்ல அன்பரே!!!
என்ன சொல்ல வந்தேனே புரியலன்னு சொல்றீங்க!! புரிஞ்சவன் தான் பிஸ்தா!!! அதுக்கு நீங்களும் நிறைய உலக படங்களை பார்க்கணும்!!!

மதுரை பாண்டி said...

@பதிவுலகில் பாபு

கமல் திறமையான நடிகர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை... சொந்த சரக்கு இல்லாதப்ப இவர் எதுக்கு கதை,திரைக்கதை நு தன் பெயரை போடனும்ன்றது தான் என் கேள்வி?

SenthilMohan said...

//*ஒரே வினா கேக்குறேன்னு சொல்லிட்டு , வரிசையா கேள்வி கேட்டுட்டே இருக்காரு.. **/
சனாவிடம் ஒரு கேள்வி கேட்பதாக கூறப்படவில்லை. சனாவை கேள்வியின் உறைவிடமாய் கூறப்பட்டிருக்கலாம்.(ஒரே அலுப்பா இருக்கு. அது மாதிரி ஒரே வினாவா இருக்கா.)

Jayadev Das said...

நல்ல பதிவு போட்டிருக்கீங்க. //பொதுவா பெரிய நடிகைகல்லாம் ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தனை தான் தேடி பிடிச்சு கல்யாணம் பண்றாங்க.. // இது சம்பந்தமா நேத்துதான் ஒரு பெரிய பதிவு படிச்சேன், போட்டு அலசு அலசு என அலசித்தள்ளியிருக்கிறார். பாருங்க.

http://redhillsonline.blogspot.com/2010/07/blog-post_21.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒலக நாயகன் விளக்கம் அருமை.
ரஞ்சிதா!, கணவருக்குப் பாதபூசை செய்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாதா? எல்லோருக்கும் காவி
அவருக்கு வெள்ளையுடை- வித்தியாசப் படுத்தியுள்ளது புரியவில்லையா?

மதுரை பாண்டி said...

@நா.மணிவண்ணன்

//இன்னும் எத்தனை காலம் ஏமாறுவார் இந்த நாட்டிலே

நன்றி நண்பா!!

ஏமாறுறவங்க இருக்றவரைக்கும் இவங்க பாடு கொண்டாட்டம் தான் !!!

மதுரை பாண்டி said...

@ யோகன் பாரிஸ்(Johan-Paris):

// எல்லோருக்கும் காவி
அவருக்கு வெள்ளையுடை- வித்தியாசப் படுத்தியுள்ளது புரியவில்லையா

அட !! ஆமால்ல !!!

மதுரை பாண்டி said...

@Jayadev Das

நீங்க குறிப்பிட்ட பதிவு படிச்சேன்... நிறைய தகவல்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

செங்கோவி said...

அவ்ர் ஒரு கேள்வின்னு சொன்னா 100 கேள்வின்னு அர்த்தமுங்கோ..எப்புடி..

எப்பூடி.. said...

எல்லா மேட்டருமே நல்லாயிருக்கு அதிலும் சனா சனா ஒரே வினா!! அருமையான கண்டு பிடிப்பு :-)

yeskha said...

ஸோ....... ஃபைனலா கமல் பத்தி என்ன சொல்ல வர்றீங்க?

சிவகுமார்(சென்னை) said...

அலங்காநல்லூர் போகாமல் பதுங்கி இருக்கும் பாண்டி எங்கிருந்தாலும் வரவும்!!

மதுரை பாண்டி said...

@செங்கோவி
@ எப்பூடி


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!!

மதுரை பாண்டி said...

@yeskha
என்னங்க இன்னுமா புரியல !!!

மதுரை பாண்டி said...

@சிவகுமார்(சென்னை)

நாங்கலாம் வந்த நாடு தாங்காது அப்பு!!!

ஜெகதீஸ்வரன். said...

கமல் -

அவர் இப்படிதான், கடவுள் பாதி, மிருகம் பாதி!.

நித்தி - ரஞ்சி -

இத்தனை தடைகளையும் தாண்டி மீண்டும் இணைந்தமைக்காக ஜோடி நம்பர் 1 பரிசு கொடுத்துடலாம்.

மாணவன் said...

super

மதுரை பாண்டி said...

@மாணவன்

நன்றிங்க !!

மதுரை பாண்டி said...

@ஜெகதீஸ்வரன்

நன்றி .. உங்க சகோதரன் ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

சி. கருணாகரசு said...

உங்க பகிர்வு நல்லாயிருக்கு....
அதுல அந்த பெயர்காரணம் ரொம்ப நல்லாயிருக்குங்க.
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கல்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப ம்நல்லா இருக்குங்க...

Anonymous said...

இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!

ம.தி.சுதா said...

நித்தியானந்தா.... கேணத்தனமாக மக்களின் முகஸ்துதி
சனா சனா.. சூசூசூசூப்பர்..

நல்லாயிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

Madurai pandi said...

@சி. கருணாகரசு
@ஆர்.கே.சதீஷ்குமார்
@"குறட்டை " புலி
@ம.தி.சுதா

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

Madurai pandi said...

@SenthilMohan

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இரவு வானம் said...

சூப்பருங்க

பாரத்... பாரதி... said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

Madurai pandi said...

@இரவு வானம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@பாரத்... பாரதி
வாழ்த்துக்களுக்கு நன்றி!!! தங்கள் ஆதரவை நோக்கி!!!

vijay said...

kaml is also rock in the world

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space