"நூலிழையில் உயிர் தப்பினேன்" நு சில பேரு சொல்லிருக்ரத நாம கேட்டு இருக்கலாம்.. மரணத்தின் கடைசி நொடி வரைக்கும் போய்ட்டு வந்தேன் நு சில பேரு சொல்லி இருக்றத நாம கேட்டு இருப்போம்... அந்த ஒரு நொடி, இன்னும் சில பேருக்கு சில மறக்க முடியாத நிகழ்வை தந்து இருக்கும்.. சில பேருக்கு ஒரு நொடியில எல்லாம் முடிஞ்சு போயிருக்கும்...
நானும் என் மனைவியும் , டூ வீலர் ல போறப்போ, என் மனைவி பின்னாடி இருந்து "பார்த்து போங்க , மெதுவா போங்க" நு சொல்லிகிட்டே தான் வருவா.. நானும் "டோன்ட் வொர்ரி , ஐ யம் எ குட் டிரைவர்" நு சொல்லிட்டு ,எப்பவும் போல ஓட்டிட்டு போவேன்.. ஆனா சில சமயம், "நாம எவ்ளோ தான் கவனமா போனாலும், எதிர்த்து வர்றவன் , ஒழுங்கா வரலன்ன நாம என்ன பண்ண முடியும்? " நு யோசிப்பேன்.. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்... நாம ஒழுங்கா போயிட்டு வந்து வீடு போய் சேந்துருவோம்ன்ற நம்பிக்கைல தான் நாம வெளியவே போக வேண்டி இருக்கு,,,
விபத்துல இருந்து உயிர் தப்பிச்சவங்கள பொதுவா "மறு ஜென்மம்" எடுத்து வந்து இருக்றதா சொல்வாங்க... இன்னும் சில பேரு , "விதி, நல்ல நேரம் , தோஷம் , கடவுள் கிருபை " நு அவங்களுக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு பேருல சொல்லிக்குவாங்க. ஒரு தப்பும் செய்யாம , யாரோ ஒருத்தன் செஞ்ச தப்புனால , எத்தனையோ குடும்பம் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்ட பட்டு இருக்கு... வேலைக்கு போய் இருக்ற நம்ம அப்பா , தனக்காக பொம்மையோடு வருவார் நு காத்துகிட்டு இருக்ற குழந்தை, இன்னைக்கு நைட் "காலேஜ் பீஸ்" கட்டுறதுக்கு பணம் தாரேன்னு சொன்ன "அண்ணன்" , சாயந்தரம் சீக்கிரம் வந்துருவேன் , ரெடியா இரு, கோவில்லுக்கு போகலாம் நு சொன்ன "புருஷன்", பீச் ல வெயிட் பண்ணிட்டு இரு, நான் வந்துட்டு இருக்கேன்னு போன் பண்ண "காதலன்" .. இப்படி பல பேரு வருகைக்காக , பல ஜீவன்கள் எங்கோ ஒரு இடத்தில காத்துட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!!! அவங்களோட நம்பிக்கை நனவாகிறது நம்ம கைலயும் இருக்கு..
ஒரு நிமிடம்!! இல்லை இல்லை!!! ஒரு நொடி நாம் செய்யும் தவறுக்காக, யாரோ ஒருவர் மட்டும் இல்லாமல், ஒரு குடும்பமே அல்லவா துயரப்பட போகிறது. எனக்கு வந்த ஒரு வீடியோவின் பாதிப்பு தான் இந்த பதிவு...
அந்த வீடியோ கீழே.. இவர்கள் மரணத்தை வென்றவர்கள்..
கூடுமான வரைக்கும் , வாகனத்தை மெதுவா ஓட்டுறதன் மூலமும் , சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றுவதன் மூலமும் பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். கொஞ்சம் கவனமாவும் , விழிப்புடனும் ஓட்டுங்க...
காலம் யாருக்காகவும் காத்து இருக்காது .. ஆனா "காலன்" நமக்காக எப்பவும் காத்துகிட்டு இருப்பான்.. அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு வண்டி ஓட்டுங்க... "safe driving"
இன்றைய பதிவு சிறப்பு/
இந்த பதிவுக்கு சம்பந்தமான வீடியோ தான்... எல்லாம் safety ku தான்.. சீட் பெல்ட் போடுங்கப்பா...
(எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ இது.. )
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
2 comments:
Embrace Life: Always wear your seat belt!
.... very good message and a great video. Thank you for sharing the message and video with us. :-)
Thanks chitra!!! I will keep trying to post the best...
Post a Comment