இது முழுக்க முழுக்க கற்பனையே !!! அப்டினுலாம் சொல்ல மாட்டேன்.. இப்டி ஒரு டாக்டர் உண்மைலேயே இருக்காரு..
இவர் தாங்க நம்ம சி(ற)ரிப்பு டாக்டர்... இவர பாக்க ஒருத்தர் போயிருக்காரு.. வேற எதுக்கு கவுன்சிலிங்குக்காக !!! அங்க நடந்த கவுன்சிலிங்க அப்டியே கீழ குடுத்து இருக்கேன்... (இதுக்கு பீஸ்லாம் வேணாம் !!!!)
patient:
டாக்டர்!!! உடற்பயிற்சி செஞ்சா மனுஷனோட ஆயுசு கூடும்னு கேள்விப்பட்டேன்.. உண்மையா ?
டாக்டர்:
அது உண்மை இல்லேங்க... உடற்பயிற்சி செஞ்சா என்ன ஆகும் ? மனுசனோட இதய துடிப்பு அதிகமாகும் !! இல்லையா!! நீங்க சொல்றத பார்த்தா , காரை வேகமா ஓட்டினா , காரோட லைப் கூடும்னு சொல்ற மாதிரி இருக்கு.. என்னை பொறுத்த வரைக்கும் உடற்பயிற்சி வேஸ்ட்..
(நம்ம மைன்ட் வாய்ஸ் : அப்பாடா !!இனிமேல் கொஞ்சம் late ah எந்திரிச்ச போதும்!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient:
டாக்டர்!!! தண்ணி அடிச்சா உடம்புக்கு கெடுதலாமே!! அப்ப நான் தண்ணி அடிக்றத குறைச்சுகனுமா ?
டாக்டர்:
நோ நோ !! அதெல்லாம் தேவை இல்ல... wine எதுல பண்றாங்க.. ப்ரூட் ல தான்,, அதே மாதிரி தான் "brandy" .. பீர் கூட ஏதோ வகையான தானியத்துல தான் தயாரிக்றாங்க.. அதுனால நோ problem !!
(நம்ம மைன்ட் வாய்ஸ் : என் வயித்துல பீர வார்த்தீங்க டாக்டர்!!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient:
என்னோட body /fat விகிதத்த எப்டி calculate பண்றது..
டாக்டர்:
அது ரொம்ப சிம்பிள்... உங்ககிட்ட ஒரு body , ஒரு fat உம் இருந்தா விகிதம் 1 : 1 . அப்டி இல்லாம உங்க கிட்ட ரெண்டு body இருந்துனா 2 : 1 . புரிஞ்சுச்சா??
(நம்ம மைன்ட் வாய்ஸ் : ரொம்ப நல்லாவே புரிஞ்சுச்சு.. ஆமா இதுல எதுவும் டபுள் மீனிங் இல்லையே டாக்டர்!!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient:
ரெகுலரா execercise பண்ணா, எந்த நன்மையையும் இல்லன்னு சொல்றீங்களா?
டாக்டர்:
எஸ்.. என்னோட philosopy என்னன்னா "No pain ... good "
(நம்ம மைன்ட் வாய்ஸ் : டண்டனுக்க !! ஏ டனுகுனக்க !!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient:
எண்ணைல பொரிச்ச உணவுகள சாப்பிட்டா கெடுதலா ??
டாக்டர்:
அதெப்படி!! இப்பலாம் பொதுவா எல்லாரும் vegetable ஆயில்ல தான் சமைக்கிறாங்க .. vegetable சாப்பிட்டா நல்லது.. ஆனா vegetable ல செஞ்ச ஆயில்ல பொரிச்சத சாப்பிட்டா என்ன ஆயிடும்..
(நம்ம மைன்ட் வாய்ஸ் : எனக்கு ரெண்டு மசாலா வடை பார்சல்ல்ல்ல் !!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient:
சாக்லேட் சாப்பிடறத பற்றி ?
டாக்டர்:
cocoa bean !! இன்னொரு vegetable ...
(நம்ம மைன்ட் வாய்ஸ் : எங்க அம்மா சொல்லி இருக்காங்க.. ஏதாவது நல்லா விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணுமாம் !! !!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
patient :
நம்ம உடம்ப ஒரு shape ல வச்சிகிடனும்ன்றது முக்கியமா ?
டாக்டர்:
"Round " உம் ஒரு shape தான்.. எப்டி வசதி!!!
(நம்ம மைன்ட் வாய்ஸ் : நம்ம shape already அப்பிடி தான் ஆகிட்டு இருக்கு.. !! !!!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நீதி ::
இதன் மூலமா நான் என்ன சொல்ல வரேன்னா , அய்யயோ மறந்து போச்சே... யாராவது கொஞ்சம் பின்னூட்டத்துல வந்து சொல்லிட்டு போங்க .. உங்களுக்கு புண்ணியமா போகும்..
இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:
தலைப்பு ::: ஆபத்தான விளையாட்டு !!!
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
4 comments:
ஒரு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வாசித்து இருக்கிறேன். உங்கள் டச்சுடன் - (மனசாட்சியின் கமென்ட் உடன்) நல்லா இருக்குது..... பகிர்வுக்கு நன்றி.
@ chitra
thanks for the encouragement. mudindhavarai adhai tamilpaduthi eludhi iruken... nandri...
அந்த டாக்டரை கொஞ்சம் பார்க்கலாமா..! அட்ரஸ் ப்ளீஸ்
@drbalas
avara paaka appointment fix pannanum... :-) i will arrange for u ... ha ha
Post a Comment