பொதுவா பதிவு எழுதுறத விட, அந்த பதிவுக்கு தலைப்பு வைக்ரதுக்குள்ள தாவு தீந்துடுது.. படத்தை குப்பையா எடுத்துட்டு, படத்துக்கு தலைப்பு "சிந்து சமவெளி " நு வைக்கிற மாதிரி , பதிவுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு தலைப்பு வைக்கலாம் நு யோசிச்சு யோசிச்சு, "கேள்விகுறி" நு தலைப்பு வைக்கலாம் நு முடிவுக்கு வந்துட்டேன்.. (கொத்து பொரட்டா , சான்ட்விச், நொறுக்ஸ் நு எல்லா தலைப்பும் ஏற்கனவே புல் ஆயிடுச்சு ல)... எனக்கு ஒரு சந்தேகம், சினிமா படத்துக்கு தலைப்பு register பண்ற மாதிரி நம்ம பதிவு தலைப்பையும் எங்கயாவது பதிவு பண்ண முடியுமா நு தான்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நம்ம தமிழ் மொழி ல பேசுற மாதிரி , மத்த language ல பேசறது வர மாட்டேன்குது...
ஐ .டி ல வேலை பார்க்கிறவங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, அவங்களுக்கு தமிழ் தெரிஞ்சாலும், தமிழ் ல பேச மாட்டனுங்க.. ஆனா எனக்கு அந்த கொடுப்பனையும் இல்ல. கூட வேலை பாக்றவங்க எல்லாம் மத்த மாநிலத்த சேந்தவங்க.. அதுனால அவங்க கிட்ட english ல தான் பேசி ஆகணும்...
தமிழ் ல நாம சொல்ல நினைகிறத , அப்டியே இங்கிலீஷ் ல translate பண்ணி சொன்னாலும் நாம நினைகிற பீலிங் மிஸ் ஆயிடுது.. உதாரணத்திற்கு, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற "நண்பேண்டா" ன்ற ஒரு வரி வசனத்த ,எப்டி english ல அந்த பீலிங்கோட மொழி பெயர்க்க சத்தியமா தெரியல!! "friend " டா நு சொன்னா நம்மள மேலயும் கீழயுமா பாக்ரானுங்க... இதுல என்ன டா காமெடி நு!!!
தமிழ் வாழ்க !! தமிழ் வளர்க!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
போன சனிக்கிழமை, ஆலுக்காஸ் ல நகை வாங்க , நானும் , என் மனைவியும் போனோம்.. நகைலாம் வாங்கி முடிச்சுட்டு, பில் pay பண்ண என்னோட "credit card " எடுத்து நீட்டுனது தான் வினை ஆகி போச்சு... அந்த கடைக்காரன், ரெண்டு தடவை " Swipe " பண்ணிருப்பான் போல .. என்னோட அக்கௌன்ட் ல இருந்து ரெண்டு தடவை அமௌன்ட் எடுத்துட்டானுங்க .. பேங்க்குக்கு போன் பண்ணி கேட்டா , ஆலுக்காஸ் அ கேட்க சொல்றன்... அவன கேட்டா இவன கேட்க சொல்றான்...
இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணி பாக்கணும்... அமௌண்ட திரும்ப போடுறானுங்களா நு ... இல்லனா பேங்க்குக்கும் வீட்டுக்கும் நடையா நடக்கணும்... கடவுளே!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பலே புகைப்படம்:
என்னா டைமிங் பா!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பலே வீடியோ ::
நம்ம ஊரு கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு முன்னோடியான நிகழ்ச்சி இது... அதில எனக்கு பிடிச்ச ஒரு வீடியோ இது..
ச்ச!!! சான்ஸ் எ இல்ல ... அவரோட தன்னம்பிக்கை கு ஒரு salute !!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
படித்ததில் பிடித்தது:
உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைக்கொள்ளாதே அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகவும் இருக்கும்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:
தலைப்பு: வாட் அ மேஜிக்
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி