Tuesday, March 19, 2013

tessttttttttt

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Friday, March 15, 2013

test post

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி
test p-ooostttttttttt

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Monday, February 7, 2011

காப்பி அடிக்கும் இசை அமைப்பாளர்கள் மற்றும் பலர்

காப்பி அடிக்கும் இசை அமைப்பாளர்கள் , மற்றும் பலர் :

                நமக்கு ஒரு சில பாடல்களை மிகவும் பிடிக்கும்.. குறிப்பிட்ட அந்த பாடல்களை நாம் விரும்பி கேட்போம்.. நம்முடைய favorite பாடல்களாக கூட இருக்கும்.. ஆனால் அந்த பாடல்கள் எங்கே இருந்தோ உருவப்பட்டு தான் இங்கு வந்தது என்று தெரிய வரும்போது நம்மை அறியாமலேயே அந்த இசை அமைப்பாளர்கள் மேல் கோவம் வருவதை தவிர்க்க முடியாது.. அப்படி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சில , வேறு இசை அமைப்பாளர்களிடம் இருந்து இவர்கள் காபி அடித்த சில பாடல்கள் இங்கே தொகுத்து இருக்கிறேன்.. (தேவா பாடல்களை இங்கே தவிர்த்து இருக்கிறேன்... அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு )..

இசை காப்பிகள்  :
 
பாடல் : கைய புடி
இசை அமைப்பாளர் : டி.இமான்.
படம் : மைனா

பாடல் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை,
படம் : அங்காடி தெரு.
இசை : விஜய் ஆண்டனி

பாடல் : கல்லை மட்டும் கண்டால்
படம் : தசாவதாரம்
இசை : ஹிமேஷ் 
காட்சி காப்பி :

காட்சி : வடிவேலு காமெடி
படம்: போக்கிரி
இயக்கம் : பிரபு தேவா


காட்சி : கண் தெரியாத ஒருவருக்கு அசின் உதவும் காட்சி.
படம் : கஜினி
இயக்கம் : முருகதாஸ் 
பாடல் வரிகள் (காபி என்று சொல்ல முடியாது.. ஆனால் ஒரே வரிகள் ) இன்னும் நிறைய இருக்கு.. முடிந்தால் இன்னொரு பதிவில் தொடர்கிறேன்..

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Monday, January 31, 2011

வா வா என் தேவதையே!!!!

வா வா என் தேவதையே!

                      

வா வா என் 
தேவதையே!! 
பொன் வாய் 
பேசும் தாரகையே!!
பொன் வாழ்வின் பூரணமே 
பெண் பூவே வா !!

வான் மிதக்கும் 
கண்களுக்கு மயிலிறகாய் 
மை இடவா ? 

மார்பு தைக்கும் 
கால்களுக்கு மணி 
கொலுசு நான் இடவா? (வா வா )


செல்ல மகள் அழுகை 
போல் ஒரு சில்லென்ற 
சங்கீதம் கேட்டதில்லை !!

பொன் மகளின் புன்னகைப்போல் 
யுக பூக்களுக்கு 
புன்னகைக்க தெரியவில்லை !!

என் பிள்ளை எட்டு 
வைத்த நடைபோல 
இந்த இலக்கண 
கவிதையும் நடந்ததில்லை ..!!

முத்துக்கள் தெரிகின்ற 
மழலைப்போல ஒரு உள்ளூர 
மொழிகளில் ஒரு 
வார்த்தை இல்லை !!

தந்தைக்கும் தாய் 
அன்பு சுரந்ததம்மா 
என் தங்கத்தை 
மார்போடு அணைக்கையிலே (வா வா )

பிள்ளை நிலா 
பள்ளி செல்ல அவள் கையோடு  
என் இதயம் துடிக்க கண்டேன் !!

தெய்வ மகள் தூங்கையிலே 
சில தெய்வங்கள் 
தூங்குகின்ற அழகை கண்டேன் !!!

சிற்றாடை கட்டி 
அவள் சிரித்த போது என்னை 
பெற்றவள் சாயல் 
என்று பேசிக்கொண்டேன் !!

வெளி நாட்டு ஆடைக்கட்டி 
நடந்த போது 
இது மீசை இல்லாத 
மகள் என்று சொன்னேன் !!

பெண் பிள்ளை தனியறை 
புகுந்ததிலே 
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை 
பார்த்துக் கொண்டேன்  (வா வா )                  இந்த பாட்டு முதல் முதல் நான் கேட்ட போதே என் மனதில் இடம் பிடித்த பாடல். இப்போ எனது வாழ்க்கையிலும் ஒன்றி கலந்த பாடலாகி போனது... ஆம்!! நான் அப்பா ஆயிட்டேன்ன்ன்னன்ன்ன்ன்... என் செல்ல தேவதைக்கு .. என் மகளோடு நானும் புதியதாய் பிறந்தேன் ஒரு அப்பாவாக போன வாரம்..!!! முதல் குழந்தை  !!!

  
டிஸ்கி:

   இன்னைக்கு தான் ஆபீஸ் வந்தேன்... பதிவுலகத்துக்கு போன வாரம் லீவ் விட்டு இருந்தேன்... இந்த வாரம் நிறைய வேலை இருக்கு,, வேற என்ன??  நிறைய பதிவு படிக்கணும். பின்னூட்டம்  போடனும்.. அப்புறம் வோட்டு போடணும்.... ஷ்ஷப்பா ... எவ்வளவு வேலைலைலைலைலை!!!


தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Wednesday, January 19, 2011

ஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!

ஆன்லைனில் பேங்க் account   வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!


                 இரண்டு நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும் open பண்ணி பார்த்தேன்... இப்படி இருந்துச்சு அந்த மெயில்..

(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )


            பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட " sender " அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல " sender " அட்ரஸ் ல
<server-alert@onlinesbi.co.in>  இருந்துச்சு... உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல  நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த " File " அ ஓபன் பண்ணேன்...
            அவங்க சிஸ்டம் ல என்னமோ error வர்றதாகவும் , அதை சரி பண்ண என்னுடைய சுய விவரங்களை ஒண்ணு விடாம குடுத்தா தான் அந்த problem அ சரி பண்ண முடியும் நு போட்டு இருந்துச்சு ... சரி.. நாம தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம்  போல, அதான் SBI இந்த மாதிரி அனுப்பி  இருக்குனு அவன் குடுத்த link -ah ஓபன் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு அதோட வில்லங்கம் என்னன்னு.. ..

இது தான் அந்த லிங்க்
" http://jonathangosselin.info/wp-theme.php "

SBI க்கும் இந்த லிங்க் அட்ரஸ்க்கும் என்னடா சம்பந்தம் நு ஓபன் பண்ணி பார்த்தேன்..
(Chrome , Firefox இந்த லிங்க் ஓபன் பண்ணும் போதே warning காமிக்குது ) ... நான் ஓபன் பண்ணுனது " IE " ல...

அந்த லிங்க்-அ ஓபன் பண்ணுனா அது இன்னொரு லிங்க்-க்கு redirect ஆச்சு..
"http://amexapparel.com/online/sbi/indexx.html "அச்சு அசலாக "SBI Bank website " போலவே டிசைன் பண்ணி இருக்குற போலியான வெப்சைட் அது...
இந்த வெப்சைட் ல என்னுடைய  விவரங்களை  குடுத்து இருந்த  என்னுடைய கணக்கில் இருந்து என்னுடைய பணம் களவாடப்பட்டு இருக்கும்..

உண்மையான SBI பேங்க் வெப்சைட்
https://www.onlinesbi .comஉடனடியாக "SBI " கு மெயில் அனுப்பி இந்த விஷயத்தை தெரிவித்தேன்.. அவர்கள் இந்த மாதிரி வர்ற மெயில்-க்கு  respond  பண்ண வேண்டாம் என்று பதில் அனுப்பி இருந்தனர்.. மேலும் சில விவரம் கேட்டு இருந்துந்தாங்க.. அதையும் அனுப்பிட்டேன்...


ஏமாற்ற படுவதை தவிர்க்க வழிகள்..

1 . ஈமெயில் ல வர்ற இந்த மாதிரி link - அ கிளிக் பண்ண கூடாது  ..
2 . பொதுவா பேங்க் சைட் லாம் " https " ல தான் ஆரம்பிக்கும்.. நம்முடைய பெயர் மற்றும் password கொடுப்பதற்கு முன் இதை உறுதி படுத்திகொள்ளணும்  .. 
3 . நாம தான் ரொம்ப உஷாரா இருக்கணும்.. இந்த மாதிரி எந்த சுய விவரம் கேட்குற மாதிரி மெயில் வந்தா, உடனடியா சம்பந்தப்பட்ட பேங்க் -ஐ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..   
4 . இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..எனக்கு சில சந்தேகம் இருக்குது..

1 . நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சு மூணு மாதம் தான் ஆகுது... இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.. நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது...
(எனக்கு இன்னும் பல வாங்கி கணக்குகள் ஏற்கனவே இருக்கு.. வேற எந்த "பேங்க்" த இருந்தும் இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல..

2 . "sender " அட்ரஸ் ல எப்படி "server-alert@onlinesbi.co.in> " இந்த மாதிரி அனுப்ப முடிஞ்சுது..


கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், சில நிமிட அஜாக்கிரதையால் தொலைத்து விடாமல் , நாம தான் விழிப்புணர்வாய்  இருக்கணும்  ..

டிஸ்கி:
இந்த லிங்க் அ ஓபன் பண்ணி "http://amexapparel.com/online/sbi/indexx.html " , தப்பும் தவறுமா நம்முடைய விவரங்களை குடுத்தாலும் அமைதியா நம்முடைய விவரங்களை களவாடி கொண்டதாக நினைத்து வாங்கி கொண்டு அடுத்த பக்கத்திற்கு தாவுகிறது..

      
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

Thursday, January 6, 2011

மன்மதன் அம்பு கமல் , நித்யானந்தா மற்றும் பலர்!!

கமல் , நித்யானந்தா மற்றும் பலர்!!

கமல் --> மன்மதன் அன்பு   :

       கமலின் அதி தீவிர ரசிகனா தான் நானும் இருந்தேன். என் சித்தப்பா இன்றும் கமல் நற்பணி மன்ற உறுப்பினர்.. சின்ன வயசுல இருந்தே கமல் தான் சிறந்தவர் , அவர் முன்னாடி ரஜினிலாம் ஒண்ணும் இல்லன்னு என் சித்தப்பா சொல்லியே , விரும்பியும் விரும்பாமலும் , கமலை ரசிக்க ஆரம்பித்தேன்.


            
          என் சித்தப்பா, மன்ற உறுப்பினர் என்பதால், எல்லா கமல் படத்துக்கும் மன்ற token கிடைச்சுரும்... எல்லா படத்தையும் பார்த்து விட்டு வருவோம்... (ஹே ராம் படத்தை இந்த மாதிரி பார்த்துட்டு வந்ததுக்கு வீட்ல திட்டு விழுந்துச்சு  !!!   ஏன்னா  அது A படமாம் )
நான் அதிக முறை பார்த்த கமல் படம்னா அது மைகேல் மதன காம ராஜன் மற்றும் தெனாலி.

              அதெல்லாம் ஒரு காலம்.. எப்போ இந்த பதிவுலகை கவனிக்க ஆரம்பித்தேனோ கமல் பற்றிய  என் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. நான் இவ்வளவு நாள் பார்த்து ரசித்து வந்த கமல் , பல உலக திரைபடங்களை பார்த்து (சுட்டு) தான் பல படங்களை எடுத்து தன் சொந்த சரக்காக விடுகிறார் என்று பரவலாக கமல் மீது குற்றசாட்டு. உலக படங்களை காபி அடித்து அந்த படங்களில் , தானே நாயகனாய் நடிப்பதால் தானோ , உலக நாயகன் நு பெயர் போல!!  (பெயர்  காரணம் !!!)

              மன்மதன் அம்பு படமும் காபி  தான்னு சொல்றாங்க... இருக்கட்டும்..
பொதுவா பெரிய நடிகைகல்லாம் ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தனை தான் தேடி பிடிச்சு கல்யாணம் பண்றாங்க.. அதன் காரணங்களை தான் மன்மதன் அம்பு அலசுகிறது.. (ச்சே!!! எப்பிடி இப்பிடி... நாங்களும் யோசிப்போம்ல !! )

நித்யானந்தா :

             அந்த சர்ச்சைக்குரிய வீடியோ டேப்பில் இருந்தது ரஞ்சிதா தான்னு நித்தியானந்தாவே  சொல்லிட்டாரு  ... ஆனா அது நான் இல்லன்னு ரஞ்சிதா சொல்றாங்க... என்ன கருமமோ...


இன்னைக்கு தினத்தந்தில வந்த இந்த  போட்டோ பாருங்க.. உண்மைலேயே பாத பூஜை தான் பண்றாங்க!!! அந்த கடவுள் என்ன அருமையா பக்தர்களுக்கு காட்சி தர்ரருனு பாருங்க... நேர்ல இதை பார்த்தவங்க நேரா சொர்க்கத்துக்கு தான் போவாங்க!!!

A .R .ரஹ்மான் :
              

                  இன்று பிறந்த நாள் காணும் ஆஸ்கார் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

காலைல ஹலோ FM கேட்டபோ தான் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுச்சு, அது என்னென்னா சத்யராஜ் படத்துக்கு நம்ம A .R .ரஹ்மான் இசை அமைச்சு இருக்கார் நு... சத்தியமா இத்தனை நாள் எனக்கு தெரியாது.. ஆனா அந்த படத்துல் எனக்கு ஒரு பாட்டு ரொம்ப பிடிச்சது...

   செந்தமிழ் நாட்டு தமிழச்சியே !! சேலை உடுத்த தயங்குறியே!!!
(படம் : வண்டி சோலை சின்ராசு!! )

ரஜினி--> எந்திரன் :

            வரும் பொங்கல் அன்னைக்கு ஜெமினி டிவியில் " Robo " படம் போடுறாங்க.. சன் டிவி ல அடுத்த தீவாளிக்கு தான் போடுவாங்க போல... ம்ம்ம்...
காதல் அணுக்கள் சாங்-la ரஜினி இப்டி பாடுவாரு...


சனா சனா ஒரே வினா!!!
அழகின் மொத்தம் நீயா?
நீ நீ நியூட்டன் நியூட்டனின் விதியா  ?
உந்தன்
நேசம்  நேசம்  எதிர்வினையா ?
நீ
ஆயிரம்  விண்மீன்  திரட்டிய  புன்னகையா ?
அழகின்  மொத்தம்  நீயா ?ஒரே வினா கேக்குறேன்னு சொல்லிட்டு , வரிசையா கேள்வி கேட்டுட்டே இருக்காரு..  ஒரு வேளை "ஒரேரேரேரே" வினான்னு சொல்லி இருப்பாரோ ?!!
   
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space