கமல்ஹாசன் செய்தது சரியா ? தப்பா ?
நானும் கமல்ஹாசன் ரசிகன் தான்.. அவரது நடிப்புக்கு விசிறி.. இப்போ வரைக்கும் !!! எப்பவும்!!!..
சமீப காலமாக அவர் மீது வைக்கப்படும் குற்றம் .. .அவர் பல்வேறு படங்களை காப்பி அடித்து தனது தனது சொந்த சரக்காக காண்பித்து கொள்கிறார் என்பது.. இதற்கு ஒரு பதிவர் ஆதார பூர்வமாக விவரங்களை சமர்ப்பித்து இருக்கிறார்.. இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்று மற்றொரு பதிவர் பதிவு போடுகிறார்..
என்னோட கருத்து இது தான்.. திருட்டு எந்த வகையில் இருந்தாலும் அது திருட்டு தான்... தனது பதிவு, யாரோ ஒருவரால் திருடப்பட்டு , இன்னொருவர் பெயரில் வெளியாகும் போது தனது மனது என்ன பாடுபடும் என்று பதிவர்கள் அனைவருக்கும் தெரியும்.. குறைந்த பட்சம், தனக்கு ஒரு கிரெடிட் குடுத்திருக்கணும் எதிர்பார்ப்போம்..
இன்னொன்றும் சொல்றாங்க.. "கமல் அந்த படத்தை வரிக்கு வரி காப்பி அடிக்கலை .. தேவையான் அளவு மாற்றி எடுத்து தான் இருக்கார் " நு.. அது எப்படி சரி நு எனக்கு புரியல.. நாம ஒரு கதை அல்லது பதிவு எழுதுறோம்.. அதை அங்கிட்டு கொஞ்சம் இங்கிட்டு கொஞ்சம் மாத்தி தன்னோட சுய கதை அல்லது பதிவு நு சொல்லிட்டா அதை நாம ஒத்துகொள்வோம ?
கண்ணாடி முன் நின்று அவர் போல் நடித்து பார்க்கிறப்ப தான் அதன் கஷ்டம் தெரியும் நு சொல்லலாம்.. நாங்க இங்க யாரும் அவரோட நடிப்ப குறை சொல்லல... அவர் ஒரு திறமை வாய்ந்த நடிகர் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்து இல்ல.. அவர் அடுத்தவன் சரக்க திருட்டிட்டு , அதெல்லாம் திருடவே இல்ல ,ம எல்லாம் நாம உட்காந்து யோசிச்சது நு சொலறது தான் தப்பு...
கமல் கண்டிப்பாக அந்த படங்களுக்கு உரிய கிரெடிட் கண்டிப்பா கொடுத்து இருக்கணும் .. இனிமேலும் சாக்கு போக்கு தேவை இல்லை..
இதுக்கு தனிப்பட்ட பதிவு போடணுமான்னு யோசிச்சேன்..
என்னோட காலேஜ் வாத்தியார் எப்பவும் ஒண்ணு சொல்லுவார்.. " காபி அடிக்கிறது என்பது ஒருத்தன் சாப்பிட்டு வாந்தி எடுத்தத, நீ மறுபடியும் சாப்பிட்டு வாந்தி எடுக்றதுக்கு சமம்" நு.. ஒருத்தன் கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் எழுதுறன்.. இன்னொருத்தன் கொஞ்சம் கஷ்டப்பட்டு அதை அவனுக்கு தெரியாம காபி அடிச்சு அவனுக்கு equal ah மார்க் எடுக்கிறான்... இதை எப்டி நாம ஒத்து கொள்ள முடியாதோ அது மாதிரி தான் இதுவும்... இதை விட வேற உதாரணம் தேவை இல்ல நு நினைக்றேன்..
இது முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட கருத்து...
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Saturday, September 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஒருத்தன் கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் எழுதுறன்.. இன்னொருத்தன் கொஞ்சம் கஷ்டப்பட்டு அதை அவனுக்கு தெரியாம காபி அடிச்சு அவனுக்கு equal ah மார்க் எடுக்கிறான்... இதை எப்டி நாம ஒத்து கொள்ள முடியாதோ அது மாதிரி தான் இதுவும்... இதை விட வேற உதாரணம் தேவை இல்ல நு நினைக்றேன்..///
உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி!! தமிழ் உதயம் !!
Kindly go thro Mr.R.P.Rajanayam blog it is extraordinary to know more about Cinema leads
Post a Comment