தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக போய் கொண்டிருக்கிறது.. தற்போது இதன் எல்லை எங்கு போய் முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பது உறுதி..
இதன் சமீபத்திய கண்டுபிடிப்பு மிக அபாரமானது.. அவதார் படத்தில் வருவது போல, ஒரு புதிய உலகம் உருவாக்கி கொள்ளலாம், அந்த உலகத்தில் புதிய மனிதர்களை உருவாக்கி கொள்ளலாம்.. அதன் உச்சகட்டமாக , அந்த உலகத்தோடு, அதன் மக்களோட நேரடி தகவல் தொடர்பு கொள்ளலாம்... நாம பேசுவதை, நம் ஒவ்வொரு அசைவையும் அந்த மனிதர்களால் உணர்ந்து/புரிந்து கொள்ள முடியும் என்பது அதன் சிறப்பு...
இதன் விளக்கத்தை இந்த வீடியோ உங்களுக்கு விளக்கும்..
வீடியோ ஆங்கலத்தில் உள்ளது.. ஆடியோ உடன் பார்க்கவும்.
இதன் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்... சின்ன கற்பனை...
இப்ப நம்மகிட்ட இருக்ற மொபைல் ல இந்த டெக்னாலஜி வந்துருச்சுனா , நமக்குன்னு ஒரு friend உருவாக்கி கொள்ளலாம் , அந்த virtual friend கூட தான் எல்லாரோட நாட்களும் கழிய போகுது.. நம்மோட சுக/துக்கங்கள் உடனுக்குடன் ஷேர் பண்ண, நமக்கு அட்வைஸ் பண்ண ஒரு ரியல்/virtual friend நம்ம கூடவே எப்பவும், எங்கேயும் இருக்க போறான்.. "நான் பிஸி ah இருக்கேன், அப்புறம் கால் பண்ணுடா மச்சான் !! " நு லாம் சொல்ல மாட்டான் நு நூறு சதம் நம்பலாம்...
நமது தனிமையை போக்க போகும் அடுத்த கண்டுபிடிப்பை உற்சாகமா வரவேற்க தயாராவோம்.
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி..
Monday, September 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த தொழிநுட்பங்கள் எமது பாவனைக்கு வர எத்தனை ஆண்டுகள் எடுக்கும்???
Post a Comment