Thursday, September 2, 2010

உங்கள் முடிவு எப்படி இருக்கும் ?

       அலுவலகத்தில் மதியம் லஞ்ச் சாப்பிடறப்ப நண்பன் ஒருவன் கேட்டான் "மச்சி ! இந்தியா வளரும் நாடு ! வளரும் நாடு ! சொல்றாங்க . இந்தியா எப்ப வளர்ந்த நாடு ஆகும் ? வளர்ந்த நாடு , வளரும் நாடு நு எதை வச்சு முடிவு பண்றாங்க ? " நு கேட்டான்.

  அதுக்கு கூட இருந்த நண்பர் "ரமணா விஜயகாந்த் " மாதிரி நிறைய விவரம் சொல்லிட்டு இருந்தார். என்னை பொறுத்த வரைக்கும் "இந்தியா ஒரு வல்லரசு நாடு , வளர்ந்த நாடு " நு கேட்குற பாக்கியம் , நம்ம ரெண்டு காதுக்கும் கிடைக்க போறது இல்ல. நம்ம சந்ததிகாகவது அந்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா நு பாக்கலாம்..

 நம்ம நாடோட நிலைமையை தீர்மானிக்கிது வேற யாரும் இல்ல.. நாம தான் .. நம்ம நாடு இப்ப இருக்ற நிலைமைக்கும் நாம தான் காரணம்..

ஒரு சின்ன (புகழ்பெற்ற) உதாரணம் ..

                         நான்கு குழந்தைகள் விளையாடிற்றுகாங்க.. அந்த இடத்துல இரண்டு விதமான ரயில்வே தண்டவாளம் இருக்கு.. ஒரு தண்டவாளம் ரொம்ப நாளா உபயோகபடுத்தாம இருக்கு.. இன்னொன்னு உபயோகத்துல இருக்கு.. அதுல ஒரு குழந்த அந்த உபயோகபடுததாத தண்டவாளம் ல விளையாடுது. மத்த மூணு குழந்தைங்க அந்த உபயோகத்திலுள்ள தண்டவாளதுள்ள விளையாடுதுங்க. அந்த மூணு குழந்தைகள் விளையாடற தண்டவாளத்துல  , அப்ப ஒரு train வருது.

 நீங்க அந்த இடத்துல இருக்கீங்க. உங்களால அந்த train பாதை ய மாதி விட்டு அந்த 3 குழந்தைகள காப்பாத்த முடியும். ஆனா அந்த ஒரு குழந்தை செத்துடும்..



கொஞ்சம் டைம் எடுத்து , கொஞ்சம் யோசிச்சு முடிவ சொல்லுங்க ...  இந்த நிலையில் உங்கள் முடிவு என்ன. ?


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.





இதே கேள்விய நிறைய மக்களிடம் கேட்கப்பட்டபோது , அதிகப்படியான மக்கள் தேர்ந்து எடுத்த  முடிவு, Train போகும் தண்டவாளத மாத்தி விடறது... நீங்க நினைக்கிறது என்னன்னா, ஒரு குழந்தையின் உயிரை கொடுத்து , அந்த 3 குழந்தைக உயிரை காப்பாத்திட முடியுமே நு .. 


இது தாங்க , இங்க பொதுவா எல்லா விசயதுலமே நடந்திட்டு இருக்கு.. நம்ம ஆபீஸ் ல , நம்ம ஊருல, நம்ம நாட்டுல, நம்ம பக்கத்துக்கு நாட்டுல,  யாரோ செஞ்ச தப்புக்கு , ஒரு தப்புமே செய்யாத அப்பாவிங்க பலி ஆயிடுரங்க.. பொதுவா எல்லா முடிவுகளும்  பெருவாரியான (majority people) மக்களுக்கு சாதகமா தான் இருக்கு.. 



அந்த குழந்தைக்காக , ஒரு துளி கண்ணீர் விட்டுட்டு , நாம அடுத்த வேலைய பாக்க போயிடுறோம்.  


இப்ப அந்த கதைக்கான முடிவு,


train பாதைய கண்டிப்பா மாத்த கூடாது.. 


1. ஏன்னா அந்த 3 குழந்தைங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும் , அந்த பாதை ல Train எப்ப வேணும்னாலும் வரும் நு !! அதுனால train வர்ற சவுண்ட் கேட்டு அந்த குழந்தைங்க விலகி போறதுக்கு வாய்ப்பு அதிகம் . அதே சமயம் நாம பாதைய மாத்தி விட்டா அந்த குழந்தை , கண்டிப்பா பலி ஆய்டும். ஏன்னா அந்த குழந்தைக்கு அங்க train வரும் நு நினைச்சு கூட பாது இருக்காது.. 



2. அந்த இரண்டாவது பாதை , ரொம்ப நாளாவே உபயோகத்துல இல்ல. இப்ப train அ அந்த பாதைக்கு திருப்பி விட்டா , இது இன்னும் மோசமான விளைவுகள ஏற்படுத்தும்.. Train ல உள்ள எல்லார் உயிருக்குமே ஆபத்து. Train எ கவுந்து போறதுக்கு வாய்ப்பு இருக்கு.. 




So லைப் ல இந்த மாதிரி , இக்கட்டான நிலைமைல நாம என்ன மாதிரி முடிவு எடுக்றோம்ன்றது நம்ம கிட்ட தான் இருக்கு... எல்லா சாதக / பாதகத்தையும் யோசிச்சு நல்ல முடிவு எடுக்க முயற்சி பண்ணுங்க... நாம எடுக்க போற முடிவுனால , ஏற்பட போற எல்லா விளைவுகளுக்கும் நாம மட்டுமே பொறுப்பு..

ஒரு புகழ்பெற்ற வாசகம்..

 " சாவி இல்லாம எந்த பூட்டும் செய்யப்படுவது இல்லை.. தீர்வு இல்லாத எந்த பிரச்னையும் இந்த உலகத்துல இல்ல"

Everybody makes mistakes; that's why they put erasers on pencils.




தங்கள் வருகைக்கு நன்றி,


அன்புடன்
மதுரை பாண்டி

8 comments:

மதுரை சரவணன் said...

ரயில் கதை மூலம் அசத்தலானச் சமூகச் சாடல்.. வாழ்த்துக்கள்.

Madurai pandi said...

நன்றி மதுரை சரவணன் தங்கள் கருத்துக்கு !!

Mohan said...

இரயில் உதாரணம் மிகவும் நன்றாக இருந்தது!

Madurai pandi said...

நன்றி மோகன்!! தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் !!

Unknown said...

நல்ல கதை நண்பா!!!

Madurai pandi said...

நன்றி நந்தா!!

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!

Madurai pandi said...

நன்றி எஸ். கே !! உங்கள் பின்னோட்டம் , இன்னும் எழுத ஊக்கம் கொடுக்கின்றது...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space