Monday, January 31, 2011

வா வா என் தேவதையே!!!!

வா வா என் தேவதையே!

                      

வா வா என் 
தேவதையே!! 
பொன் வாய் 
பேசும் தாரகையே!!
பொன் வாழ்வின் பூரணமே 
பெண் பூவே வா !!

வான் மிதக்கும் 
கண்களுக்கு  மயிலிறகாய் 
மை  இடவா ? 

மார்பு  தைக்கும் 
கால்களுக்கு  மணி 
கொலுசு  நான்  இடவா?  (வா  வா )


செல்ல  மகள்  அழுகை 
போல்  ஒரு  சில்லென்ற 
சங்கீதம்  கேட்டதில்லை !!

பொன்  மகளின்  புன்னகைப்போல் 
யுக  பூக்களுக்கு 
புன்னகைக்க  தெரியவில்லை !!

என்  பிள்ளை  எட்டு 
வைத்த  நடைபோல 
இந்த  இலக்கண 
கவிதையும்  நடந்ததில்லை ..!!

முத்துக்கள்  தெரிகின்ற 
மழலைப்போல  ஒரு  உள்ளூர 
மொழிகளில்  ஒரு 
வார்த்தை  இல்லை !!

தந்தைக்கும்  தாய் 
அன்பு  சுரந்ததம்மா 
என்  தங்கத்தை 
மார்போடு  அணைக்கையிலே  (வா  வா )

பிள்ளை  நிலா 
பள்ளி  செல்ல  அவள்  கையோடு   
என்  இதயம்  துடிக்க கண்டேன்  !!

தெய்வ  மகள்  தூங்கையிலே 
சில  தெய்வங்கள் 
தூங்குகின்ற அழகை கண்டேன் !!!

சிற்றாடை  கட்டி 
அவள்  சிரித்த  போது  என்னை 
பெற்றவள்  சாயல் 
என்று  பேசிக்கொண்டேன் !!

வெளி  நாட்டு  ஆடைக்கட்டி 
நடந்த  போது 
இது  மீசை  இல்லாத 
மகள்  என்று  சொன்னேன் !!

பெண்  பிள்ளை  தனியறை 
புகுந்ததிலே 
ஒரு  பிரிவுக்கு  ஒத்திகையை 
பார்த்துக்  கொண்டேன்   (வா  வா )







                  இந்த பாட்டு முதல் முதல் நான் கேட்ட போதே என் மனதில் இடம் பிடித்த பாடல். இப்போ எனது வாழ்க்கையிலும் ஒன்றி கலந்த பாடலாகி போனது... ஆம்!! நான் அப்பா ஆயிட்டேன்ன்ன்னன்ன்ன்ன்... என் செல்ல தேவதைக்கு .. என் மகளோடு நானும் புதியதாய் பிறந்தேன் ஒரு அப்பாவாக போன வாரம்..!!! முதல் குழந்தை  !!!

  
டிஸ்கி:

   இன்னைக்கு தான் ஆபீஸ் வந்தேன்... பதிவுலகத்துக்கு போன வாரம் லீவ் விட்டு இருந்தேன்... இந்த வாரம் நிறைய வேலை இருக்கு,, வேற என்ன??  நிறைய பதிவு படிக்கணும். பின்னூட்டம்  போடனும்.. அப்புறம் வோட்டு போடணும்.... ஷ்ஷப்பா ... எவ்வளவு வேலைலைலைலைலை!!!


தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

14 comments:

கும்மாச்சி said...

வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் பாண்டி .

ஆனந்தி.. said...

wow...Congrats my dear brother...

சேலம் தேவா said...

வாழ்த்துகள் மதுரைக்காரரே..!! என் குட்டி தேவதை பிறந்த போதும் இந்த பாடலை வைத்துதான் நான் பதிவுலகில் இணைந்தேன். :)

எப்பூடி.. said...

உங்கள் பதிவுக்காக சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம், உண்மையில் வியாசாகர் & வைரமுத்து & ராதாமோகன் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடல் வந்த புதிதில் இந்த பாடலை தினமும் குறைந்தது நான்கு தடவையாவது கேட்பது வழக்கம். மதுபாலகிருஷ்ணன் கலக்கியிருப்பார், பகிர்விற்கு நன்றி.

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பா

arasan said...

வாழ்த்துக்கள் நண்பரே ,.,,,
நல்ல பாடலும் கூட ..

எப்பூடி.. said...

வாழ்த்துக்கள் பெரியவரே (அதுதான் அப்பா ஆகீட்டீன்களே)

Chitra said...

WOW!!!!! GREAT!!!! CONGRATULATIONS!!!

Madurai pandi said...

@கும்மாச்சி
@தமிழ் உதயம்
@ஆனந்தி
@சேலம் தேவா
@எப்பூடி
@நா.மணிவண்ணன்
@அரசன்
@Chitra

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!!

Anonymous said...

>>> சந்தோசமான செய்தி பாண்டி. பெண் குழந்தை இறைவன் தந்த வரம். தங்கள் குடும்பம் வளமாக வாழ வாழ்த்துகள்!!

Madurai pandi said...

நன்றி சிவகுமார்!!

Anonymous said...

கலக்குறீங்க வாழ்த்துக்கள்

Madurai pandi said...

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி பாரத்... பாரதி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space