Friday, September 17, 2010

சொர்க்கம் கண்டவன் யாரடா!!!

                                             சொர்க்கம் கண்டவன் யாரடா!!!



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !





சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !








சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ? 




மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை 
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன் 
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?







சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!



யாரோ எழுதி , நான் படித்ததை  , எனக்கு பிடித்ததால் இங்கு பதிவு செய்திருக்கிறேன் !!    
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைய சிறப்பு/சிரிப்பு  வீடியோ:

தலைப்பு : புது வித அலாரம் போல!!


  
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

8 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை... சொர்கமே என்றாலும்...

எந்த ஊர்ல கிடைக்குது இந்த அலாரம்னு கேட்டு சொல்லுங்க

மதுரை சரவணன் said...

//சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!///

uஅருமை வாழ்த்துக்கள்

jothi said...

////சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!///

மெயிலில் நானும் இதைப்படித்தேன்,..

வீடியோ,. ஒருத்தன் நிம்மதியா தூங்க கூடாது இல்ல,..

சிவராம்குமார் said...

//சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!//

மனசெல்லாம் கனக்குதுங்க! ஒரு ஸ்டேட்குள்ளேயே இருக்கும்போதே எனக்கு இப்படின்னா வெளிநாடுகள்ள இருக்கிறவங்க மனசு எப்படி இருக்கும்!!!

Madurai pandi said...

@ அப்பாவி தங்கமணி
அந்த alarm ah தான் நானும் தேடிட்டு இருக்கேன்.

@ மதுரை சரவணன்:
நன்றி தொடர்ந்து உங்களுடைய ஆதரவுக்கு .
@ jothi
அதெப்படி ஒருத்தன நிம்மதியா தூங்க விடுறது?

@சிவராம்குமார்
நீங்க சொல்றது சரி.. அந்த வலி, அவங்களுக்கு அதிகமா தான் இருக்கும்..

Chitra said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..... பலரின் ஆதங்கமும் அதுதான்.....

Chitra said...

Thank you for visiting my blog. You have a nice blog site. (Following)

Best wishes!!!

Madurai pandi said...

@Chitra
Thanks for the comment and your wishes...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space