Monday, September 13, 2010

பாஸ் (என்ற ) பாஸ்கரன் ஒரு சிரிப்பு பார்வை

பாஸ் (என்ற ) பாஸ்கரன் ஒரு சிரிப்பு பார்வை

                 படம் வரதுக்கு முன்னாடியே, இந்த படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லி , என் மனைவி கிட்ட இருந்து அன்பு கட்டளை ... ஏற்கனவே "சர்வம்" படம் கூப்பிட்டு போய் (வேற எதுக்கு!!  தலைவி த்ரிஷாக்காக தான் ) நான் வாங்கி கட்டிகிட்டது எனக்கு தான் தெரியும்.. ஆனா "மதராச பட்டினம்" படம் பார்த்ததுக்கு அப்புறமோ  என்னவோ , "ஆர்யா" படம் பாக்க கூட்டிட்டு போக சொல்லி ஒரே அன்பு தொல்லை.. சரி போகலாம் நு முடிவெடுத்து சென்ற ஞாயிறு போனோம்..

                 குடுத்த காசு வீணா போகல..  கதை நு பார்த்தா ரொம்ப சிம்பிள்.. ஆனா அதை present பண்ண விதத்துல தான் கலக்கிட்டாங்க.. ரொம்ப நாளுக்கு அப்பறம் இப்டி ஒரு சிரிப்பு  படம் பாக்றேன்..             

                    
               ஆனா படம் முடிச்சுட்டு வெளில வந்தப்புறம் , படத்துல உள்ள காமெடி லாம் நினைச்சு பாக்றேன்.. ஒண்ணு ரெண்ட தவிர மத்ததுலாம் நியாகபத்துல வர மாட்டேன்குது.. ஆனா படம் full ah சிரிச்சுட்டு இருந்தேன்,.. அதான் இந்த படத்தை   இன்னொரு தடவ பார்த்தா  கூட விழுந்து விழுந்து சிரிக்கலாம்.. (விழுந்தா எப்டி சிரிக்க முடியும்!!)

         படம் full ah நயன்தாரா கு ஒரே ஒரு வேலை தான்.. அது கீழ உள்ள படத்த பார்த்தா தெரியும்..




                    படத்துல எப்ப பார்த்தாலும் மேடம் சிரிச்சுக்கிட்டே தான் இருக்காங்க.. ஆர்யா அவர சிரிப்பு மூட்டிகிட்டே இருக்காறு... அவ்ளோ தான் !!! ஹீரோ - ஹீரோயின் வேலை ஓவர் இந்த படத்துல...

             சந்தானம் படத்துல வர்ற எல்லா சீன்லயும் சிக்ஸர் அடிக்றார்.. அதிலயும் அந்த "romanace லுக்" , சூர்ய வம்சம் டைப் காமெடி லாம் ரொம்ப சூப்பர்.. கலக்கிட்டாங்க !!! சந்தானத்துக்கு இந்த படம் ஒரு மைல் கல் நு தாராளமா சொல்லலாம்.  Timing காமெடி ரொம்ப நல்லா வந்துருக்கு..

                    எனக்கு ஒரே ஒரு டவுட் தான்... ஒவ்வொரு சீனையும் எத்தனை டேக் எடுத்துருப்பாங்க நு தான்..    இந்த படத்தை எடுக்கிறப்ப சிரிக்காம இருக்கறதே அந்த படத்துல நடிச்சவங்களுக்கு ஒரு சவாலான விசயமா தான் இருந்துருக்கும்..

படத்தின் பிளஸ்:

  1. சந்தானம் + ஆர்யா கூட்டணி  
  2. காமெடி
  3. இயக்கம்
மைனஸ்:
  1. நயன்தாரா 
  2. இசை
  3. இரண்டாம் பாதி - கொஞ்சம் தொய்வு
            
            உதயநிதி ஸ்டாலின் க்கு எங்கயோ மச்சம் போல.. தலைவர் வாங்கி ரிலீஸ் பண்ற படம் லாம் பாக்ஸ் ஆபீஸ் ல நல்லாவே போகுது.. அடுத்து "மைனா" நு ஒரு படத்தை வாங்கி இருக்றாரு .. படம் எப்டி இருக்கும் நு பாக்கலாம்.. 



ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

3 comments:

தமிழ் உதயம் said...

சந்தானம் காமெடி அப்படி தாங்க இருக்கும்.

ரசிகன் said...

அப்போ நமக்கும் உடனே ஒரு டிக்கெட் போட்டுறலாம்:))

படம் பார்க்க ஆர்வம் வர வச்சதுக்காக,டிக்கெட் காசை உங்ககிட்டேயிருந்து கலைட் பண்ணிட்டா போச்சு..

Madurai pandi said...

@தமிழ் உதயம் : சந்தானம் காமெடி கௌண்டமணி சார் காமெடியோட நிறைய பேரு compare பண்றாங்களே!!

@ரசிகன் : அட்ரஸ் சொல்லுங்க! அனுப்பி வச்சுறலாம்.. :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space