Tuesday, August 31, 2010

உடைந்து நொறுங்கும் கூகிள் !! நம்புங்கள் !!

யாராலையும் உடைக்கவே முடியாத கூகுள எப்டி உடைக்குரதுனு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன்..

அப்புறம் கடைசியா ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன். கூகிள் உடைந்து நொறுங்கும் காட்சியை காண நண்பர்களே ரெடி ஆகிக்கோங்க !!

இங்கு கிளிக் பண்ணி பார்க்கவும்!!

கூகுள் உடையும் வழி   !!


தங்கள் வருகைக்கு நன்றி..

பாண்டி

     

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் !!

பொதுவா நம்ம ஊரு ஆளுங்க வெளி நாட்ட பத்தி ரொம்ப புகழ்ந்து பேசுவாங்க. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல !! நம்ம ஊருல இல்லாத எதை இவுங்க புதுசா மத்த நாட்டுல கண்டுட்டாங்க நு !!

அங்க போயிடு வந்தத பெருமையா போட்டோ எடுத்துட்டு வந்து facebook ல upload பண்ணி சீன் காட்டுவாங்க.. அதுக்கு நாம கமெண்ட் வேற போடணும் நு எதிர் பார்ப்பானுங்க ..

நம்ம ஊரு போடோஸ் கொஞ்சம் பாருங்க !! உங்களுக்கே புரியும்!!

Jog falls







Paddy fields in konkan










Pune to Shrivardhan bus 






Rice fields in chiplun 






Marleshwar waterfall 






Mumbai-Goa Highway near Kashedi ghat 






Karwar Beach .








Malvan








Doodhsagar waterfall, Goa 








Ganpatiphule beach 










Amboli ghat








இதெல்லாம் ரொம்ப கம்மி தாங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு!! முதல்ல நம்ம ஊர முழுசா சுத்தி பார்த்துட்டு அப்பறம் போங்க வெளி நாட்டுக்கு!!! 




உங்கள் வருகைக்கு நன்றி!!


பாண்டி 

Monday, August 30, 2010

அகர முதல

எல்லாருக்கும் வணக்கம்,

                ப்ளாக்குக்கு நான் புதுசு இல்ல. இவ்ளோ நாள் சும்மா படிக்க மட்டும் செஞ்சேன்.. சரி .. நாமளும் பிரபல பதிவர் ஆகலாமே என்ற நப்பாசைலாம் இல்லாம (அட! நம்புங்கப்பா !!) சும்மா எழுத ஆரம்பிக்க போறேன்..

முதல் பதிவு .

எனக்கு முதல் முதல் நிகழ்ந்த /பார்த்த அனுபவம் பகிர்ந்திக்கலாம்நு நினைக்றேன்.

பார்த்த முதல் திரைப்படம் :

                           எனக்கு நினைவுக்கு தெரிஞ்சு என் அப்பா, அம்மா , தம்பி எல்லாரும் சேந்து தியேட்டர் கு போய் பார்த்த படம் நடிகன், வா அருகில் வா, மைகேல் மதன காம ராஜன்.
இந்த மூணுல எந்த படம் first பார்த்தேன்னு ஞாபகம் இல்ல.  ஆனால் ஏதோ ஒன்னு.

படிச்ச முதல் பள்ளி :

                      முதல்ல படிச்சது TVS . வெறும் செகண்ட் கிளாஸ் வரைக்கும் தான். அப்புறம் மங்கையர்க்கரசி நு ஒரு ஸ்கூல் ல +2 வரைக்கும் படிச்சு முடிச்சேன்.

வாங்கின முதல் பரிசு:

                     அஞ்சாம் கிளாஸ் படிக்கறப்ப , கிளாஸ் first ரேங்க் வாங்குனா , ஒரு வாட்ச் வாங்கி தாரேன்னு அப்பா சொன்னத மதிச்சு , படிச்சு(ஆச்சர்ய குறி) first ரேங்க் வாங்கி , அப்பா ta வாங்கின titan வாட்ச்.

வாங்கின முதல் அடி:

                 நானும் ஹிந்தி கிளாஸ் போறேன்னு சொல்லி கட் அடிச்சுட்டு ஏமாத்துனதுக்கு , வாங்கினது. சும்மா சொல்ல கூடாதுங்க . செம்ம அடி..

முதல் காதல் :

               எனக்கும் காதல்நா ரொம்ப அலர்ஜி யா தான் இருந்துச்சு... ஆனா நமக்கும் காதல் ஒரு சுப யோக சுப தினத்தில் வந்து தொலைத்தது. நல்ல வேளை. புட்டுகிச்சு. இப்ப அவளை ஒரு நாளாவது பாக்க மாட்டோமோ நு தோணுது.. வேற எதுக்கும் இல்ல. சும்மா ஒரு தேங்க்ஸ் சொல்றது கு தான். அதுனால தான இப்ப எனக்கு பெஸ்ட் wife கிடைச்சுருக்கு.(இதுவும் லவ் marriage தான்)

முதல் கல்யாணம் :

                 ஹி ஹி !! ஒண்ணே ஒண்ணு தான்.

 இன்னும் நிறைய இருக்கு.. இன்னொரு பதிவு ல பகிர்ந்துறேன்.. வேணாம் !! இதோட நிறுத்திக்கோ சொல்றது காதுல விழுறது.. இருந்தாலும் நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..

உங்கள் ஆதரவுக்கு நன்றி..

நன்றி,
மதுரை பாண்டி
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space